13
April, 2026

A News 365Times Venture

13
Monday
April, 2026

A News 365Times Venture

“திமுக செல்வாக்கு குறைந்ததால், மும்மொழிக் கொள்கையை வைத்து திசை திருப்புகிறார்கள்'' -கே.பி.முனுசாமி

Date:

அதிமுக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கலந்துகொண்டார். அப்போது, பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வாங்க பொதுமக்கள் முண்டியடித்ததால், அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அ.தி.மு.க-வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் திணறினர்.

முண்டியடிக்கும் கூட்டம்

அதன்பிறகு, பொதுக்கூட்டத்தில் பேசிய கே.பி.முனுசாமி,

“அ.தி.மு.க மத்திய அரசுக்கு அடிமையாக இருந்ததாக விமர்சித்தார்கள். தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் கேட்கும் போது மத்திய அரசுடன் நாங்கள் இணக்கமாக இருந்தோம். அது, அடிமையாக இருந்தது கிடையாது. தேவையை பூர்த்தி செய்ய யாருடனும் இணக்கமாக செல்லவும் தயார். தேவைப்பட்டால் எதிர்க்கவும் தயார்.

இரு மொழிக் கொள்கையில் அ.தி.மு.க உறுதியாக உள்ளது. நாங்கள் அரசியலுக்காக அதை செய்யவில்லை. தி.மு.க அரசு மீது மக்களிடம் செல்வாக்கு குறைந்ததால் மும்மொழிக் கொள்கை பிரச்னையையும், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை பிரச்னையையும் கொண்டு வந்து திசை திருப்புகிறார்கள். அனைத்துக் கட்சி கூட்டத்தில் கல்வி நிதி பிரச்னை குறித்து தி.மு.க பேச கூடாது. மும்மொழி கொள்கை குறித்தும், தொகுதி மறுவரை குறித்தும் மட்டும் தான் பேச வேண்டும்” என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தவெக: “தபால் வாக்கு செலுத்துவதில் முறைகேடு நடந்திருக்கிறது" – சிடிஆர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேர்தலுக்கான பிரசாரமும் சுறுசுறுப்பாக நடந்துவருகிறது. இதற்கிடையில்,...

ஹார்முஸை முடக்கும் அமெரிக்க முடிவு: `எதிர்க்கும் உலக நாடுகள்' – மீண்டும் பின்னடைவில் ட்ரம்ப்!

ஈரான் - இஸ்ரேலுக்கு இடையிலான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியது அமெரிக்கா....

அதிர வைத்த விஜய்; எச்சரித்த முதல்வர் தரப்பு – தூத்துக்குடி அஜிதா திமுக-வில் இணைந்த பின்னணி!

தூத்துக்குடி தவெக நிர்வாகியான அஜிதா நேற்று திடீரென திமுக-வில் இணைந்திருக்கிறார். இதன்...

சவுக்கு சங்கர் தாயார் மறைவு; அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கரின் தாயார் கமலா, வயது முதிர்வு மற்றும்...