22
February, 2026

A News 365Times Venture

22
Sunday
February, 2026

A News 365Times Venture

தள்ளிப்போகும் பேச்சுவார்த்தை; இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தத்தில் சுணக்கம்?

Date:

கடந்த 2-ம் தேதி, இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம் அறிவிப்பை வெளியிட்டார்கள் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப்.

இந்த ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்டு, வரும் ஏப்ரல்‌ மாதம் முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டது.

தற்போது இந்திய பொருள்களுக்கு அமெரிக்காவில் 50 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் அமலாகும் போது, அது 18 சதவிகிதம்‌ ஆக குறையும்.

ஆக, இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு மிகப் பெரிய ஹேப்பி நியூஸாக இருந்தது.

ட்ரம்ப்

ஆனால், இந்த ஹேப்பி நியூஸ் தற்போது சுணங்கி உள்ளது.

ஆம்… ஒப்பந்தம் குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை நடத்த இந்திய அதிகாரிகள் நாளை அமெரிக்கா செல்ல இருந்தனர்.

இந்தச் சந்திப்பு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்…

ஒன்று, ‘அதிகாரத்தை மீறி ட்ரம்ப் உலக நாடுகளின்‌ மீது வரி விதித்துள்ளார்’ என்று வரிகளை ரத்து செய்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.

இன்னொன்று, ட்ரம்ப் வருகிற‌ 24-ம் தேதி முதல், உலக நாடுகளின்‌ மீது 15 சதவிகிதம்‌ வரி விதித்துள்ளார். அடுத்த சில மாதங்களில், ஒவ்வொரு‌ நாட்டிற்கும்‌ ஏற்ப சட்டத்திற்கு உட்பட்டு‌ வரி அறிவிக்கப்படும்‌ என்று தெரிவித்துள்ளார்.

அதனால், இனி அனைத்து‌ நாடுகளின் வரியின் அளவுகள் மாற உள்ளது. அதைப் பொறுத்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை எடுத்துச் செல்லலாம் என்று நாளைய சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மதுரை: `நாம தான் ஜெயிக்கிறோம், எப்பவுமே நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்'- மு.க.ஸ்டாலின் பேச்சு

fமதுரை உத்தங்குடியில் தென் மண்டல வாக்குச்சாவடி பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது....

பிப். 24 முதல் உலக நாடுகளுக்கு புது வரி அமல்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ட்ரம்பின் புது ரூட்!

'அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்போ, தீர்ப்பில்லையோ... வரி ரத்தோ, வரி ரத்து...

வேலூர்: விஜய்க்காகத் தயாரான பிரமாண்ட பந்தல்; 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி – பரபரக்கும் ஏற்பாடுகள்!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அடுத்துள்ள அகரம்சேரியில் நாளை நடைபெறும் த.வெ.க...