3
February, 2026

A News 365Times Venture

3
Tuesday
February, 2026

A News 365Times Venture

தமிழ்நாட்டுக்கு 2 புல்லட் ரயில்கள்; சென்னை – பெங்களூரு 67.8 நிமிடங்களில்… அமைச்சர் அறிவிப்பு!

Date:

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நேற்று (ஞாயிறு) அதிவேக புல்லட் ரயில் திட்டங்கள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், “தென் இந்தியாவில் ரயில்வேயின் அடுத்த மேம்பாட்டு முன்னெடுப்பாக, `சென்னை-பெங்களூரு-ஹைதராபாத்’ வழித்தடங்களை ஹைஸ்பீடு ரயில் காரிடர்களாக மாற்றப் போகிறோம். இந்த முக்கோண இணைப்பு, ரயில் போக்குவரத்தில் முக்கியமானதாகும். இந்த முயற்சி பொருளாதார மேம்பாடு மற்றும் ஐ.டி மையங்களை இணைக்கும் நோக்கம் கொண்டிருக்கிறது. இதன் மூலம் மக்களின் பயண நேரம் பெரிதும் குறையும். இந்த புல்லட் ரயில் திட்டத்தின் மூலம் சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு 1 மணி 13 நிமிடங்களில் சென்றடையலாம். அதேபோல சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு 2 மணி நேரம் 55 நிமிடங்களில் சென்றடையலாம்.

புல்லட் ரயில்

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இணைப்பை மேம்படுத்தி, பிராந்திய வளர்ச்சியை விரைவுபடுத்த முடியும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

மத்திய பட்ஜெட்டில் புல்லட் ரயில் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மேற்கண்ட வழித்தடங்களில் இரண்டு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் மக்களின் பயண நேரம் வெகுவாகக் குறையும்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

பொதுவாக சென்னையிலிருந்து பெங்களூருவுக்குச் செல்ல ரயிலில் 5-6 மணி நேரம் எடுக்கும். அதேபோல சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்குச் செல்ல 9-11 மணி நேரம் ஆகும். புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'ஆகஸ்ட்' மாத எண்ணெய் அரசியல்; இந்திய வர்த்தகத்தில் அமெரிக்கா நாட்டாமை; மத்திய அரசின் மௌனம் | Detail

2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம். "இனி இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்...

'CM கான்வாய்க்காக நிறுத்தப்பட்ட விஜய்யின் கார்; கடுப்பான முதல்வர் தரப்பு! – உளவுத்துறைக்கு 'ரெய்டு?'

தவெகவின் மூன்றாமாண்டு தொடக்க விழா விஜய் தலைமையில் பனையூரில் இன்று நடந்திருந்தது....

ஆரணி: வன்னியர் இட ஒதுக்கீடு கோரி பட்டதாரி இளைஞர் தற்கொலை – திமுக அரசு மீது அன்புமணி கடும் தாக்கு!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன். இவரின்...