1
July, 2025

A News 365Times Venture

1
Tuesday
July, 2025

A News 365Times Venture

"தமிழ்நாட்டுக்கான 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டும்!" – மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

Date:

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்’ என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

மத்திய அரசின் இந்த இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு அலை கிளம்பியிருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகத் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில், மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு, யுஜிசி புதிய விதி, புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் (பிப் 18) நடைபெற்றிருந்தது. இதையடுத்து இந்தி திணிப்புக் குறித்து பல்வேறு கருத்துகளும், எதிர்ப்புகளும் கிளம்பின.

ஸ்டாலின் – மோடி

இந்நிலையில் மும்மொழிக் கொள்கையை ஏற்காததால், தமிழ்நாட்டுக்கான 2,152 கோடி ரூபாய் நிதியை கொடுக்காமல் இருப்பது நியாயமல்ல என்று பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே… NEP2020-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் எங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான ‘Samagra Shiksha‘ நிதி ஒதுக்கப்படும் என்பது எவ்விதத்தில் நியாயம்?

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லையா? இருவேறு திட்டங்களுக்கு முடிச்சுப் போட்டு கல்விக்கான நிதியை முடக்குவது அறமா? இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டுக்கான 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...