23
March, 2026

A News 365Times Venture

23
Monday
March, 2026

A News 365Times Venture

“தமிழக ஆளுநர் நேர்மையானவர்; அவருக்கு மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்" – சி.பி ராதாகிருஷ்ணன்

Date:

மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் பல அரசியல் தலைவர்கள் தேச விரோத சக்திகளை ஊக்குவிப்பதை முதல் வேலையாக வைத்துள்ளனர்.

சி.பி ராதாகிருஷ்ணன்

நக்சலைட்டுகளால் முன்னாள் அமைச்சர் கொலை செய்யப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். தற்போது அர்பன் நக்சலைட்கள் எங்கும் பரவி வருகிறார்கள். இது தேச பக்தர்களின் நலனுக்கு எதிரானது. நாட்டில் தீவிரவாதம் எந்த உருவில் வந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். 

மத்திய அரசு தமிழகத்துக்கு எவ்வளவு தந்தாலும் அதைப் போற்றுவதற்கு சிலருக்கு மனம் இல்லை. தமிழக அரசு, மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும். தமிழகத்தின் ஆளுநர் நேர்மையானவர்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

அவரது கடமைகளைச் சிறப்புடன் செய்கிறார். மாநில அரசு அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். ஒன்றிய அரசு என்று கூறுவதே தவறு. மத்தியில் இருப்பது ஒன்றிய அரசு என்றால், மாநிலத்தில் இருப்பது பஞ்சாயத்து அரசா. இதுவரை இல்லாத ஒரு மொழிபெயர்ப்பை தற்போது கொண்டு வருகிறார்கள்.

நடிகர் கமல்ஹாசன் என்றைக்காவது ஒன்றை ஒழுங்காகக் கூறியுள்ளாரா? திமுகவை ஒழிப்பது தான் என்னுடைய வேலை என்று கட்சி தொடங்கினார். ஆனால் தற்போது திமுகவுடன் இருப்பதுதான் தமிழகத்துக்கு நன்மை பயக்கும் என்கிறார். அவருக்கு எது நன்மை பயக்கிறதோ, அதை தமிழகத்துக்கு நன்மை பயக்கும் என்று நினைப்பவரைப் பற்றி நான் என்ன கூற முடியும்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

கமல்ஹாசன் தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார். சமஸ்கிருத மொழியில் இருந்து தான் தமிழ் மொழி வந்தது என்று கூறினால் ஏற்றுக் கொள்வோமா?” என கேள்வி எழுப்பினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"5 நாள்களுக்குத் தாக்க மாட்டோம்" – ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

ஈரான் போர் நான்காவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'எப்போது இந்தப் போர்...

பாமக: `மாம்பழம் ஜூஸ் ஆகிவிடக்கூடாது!' – ராமதாஸ், அன்புமணிக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது நிறுவனர் ராமதாஸ்...

அதிமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு விவரம்; அதிமுக அலுவலகத்தில் டிடிவி! யார் யாருக்கு எவ்வளவு?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி...

போயஸ் தோட்டத்தின் செல்லப்பிள்ளை TTV தினகரனின் முதல் தேர்தலும் ஆச்சரியங்களும்!  | முதல் களம் 11

டி.டி.வி.தினகரன்முதல் களம் 11ஓர் இடைத்தேர்தலில் வழக்கமாக என்னவெல்லாம் நடக்கும்? அந்த நேரத்து...