2
April, 2026

A News 365Times Venture

2
Thursday
April, 2026

A News 365Times Venture

'தனிச் சின்னம் வேண்டாம்!'- ஒதுக்கபட்ட 4 தொகுதிகளிலும் உதயசூரியனில் போட்டியிடும் மதிமுக

Date:

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28, தேமுதிக 10, விசிக 8, கம்யூனிஸ்ட்கள் தலா 5, கொமதேக 2, மதிமுக 4, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக-வுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் எஸ்டிபிஐ உட்பட சில சிறிய கட்சிகள் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் தலா ஒரு தொகுதியில் களமிறக்கப்பட உள்ளன.

அதேபோல மதிமுக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளில் 3 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர் ஆகிய தொகுதிகளில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

வைகோ

ஆனால் தற்போது மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளிலும் அக்கட்சி உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக மதிமுக தலைவர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “2026, ஏப்ரல் திங்களில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி தி.மு.கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான சீர்காழி (தனி) தொகுதியிலும் கழக வேட்பாளர் வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதை தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"ஜனநாயகன் படத்தை வெளியிட விடாம கூட்டு சூழ்ச்சி பண்ணிட்டாங்க.!" – திருச்சியில் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு...

ஈரோடு: முதல்வர் ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் | Photo Album

‘செக்’ வைத்த ஸ்டாலின்... நிராகரித்த எடப்பாடி... வேட்பாளர் பட்டியல் களேபரங்கள்! Source...

மதிமுக: `மகனால் வைகோ உயிருக்கு ஆபத்து; கார்ப்பரேட் ரெளடி.!" – முன்னாள் நிர்வாகியின் பரபரப்பு பேட்டி

வைகோ தலைமையிலான ம.தி.மு.க-வில் 30 ஆண்டுகாலம் பயணித்து, தற்போது அ.தி.மு.க-வின் மாநில...