12
March, 2026

A News 365Times Venture

12
Thursday
March, 2026

A News 365Times Venture

`தடைபோடும் எ.வ.வேலு; சிதைக்கப்படும் இஸ்லாமியர் பிரதிநிதித்துவம்’ – ஆட்டம் காணும் ஆம்பூர் தொகுதி

Date:

திருப்பத்தூர் மாவட்டத்தில், பிரியாணிக்குப் பெயர்போன ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் பட்டியலின மக்களும், இஸ்லாமியர்களுமே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றனர். ஆனால், `இந்த இரண்டு சமூகங்களுக்கும் ஆம்பூர் தொகுதி தி.மு.க-வில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை’ என்று ஆதங்கப்படுகிறார்கள் உடன்பிறப்புகள்.

இதுபற்றி, தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த இஸ்லாமிய பிரமுகர்கள் சிலர் பேசுகையில், “ஆம்பூர் தொகுதிக்குள் 2,12,631 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில், அதிகபட்சமாக பட்டியல் சமூக மக்கள் 26 சதவிகிதமும், அதற்கடுத்த எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் 24 சதவிகிதமும் இருக்கின்றனர். அடுத்ததாக, முதலியார் 16 சதவிகிதமும், வன்னியர் 14 சதவிகிதமும் பரவலாக வாழ்கின்றனர்.

சிட்டிங் எம்.எல்.ஏ அ.செ.வில்வநாதன் – அமைச்சர் எ.வ.வேலு

ஆனால், வெறும் 7 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் நாயுடு சமூகத்துக்கே ஆம்பூர் தி.மு.க-வில் தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படுகிறது. குறிப்பாக, சிட்டிங் எம்.எல்.ஏ-வான அ.செ.வில்வநாதனுக்கே மூன்றாவது முறையாக சீட் வழங்கும் எண்ணத்தில் காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்த முறை ஆம்பூர் தொகுதியைக் கேட்கிறது. ஆனால், எ.வ.வேலு மீண்டும் வாணியம்பாடி தொகுதியை எடுத்துக்கொள்ள முஸ்லீம் லீக்கை வற்புறுத்துகிறார். அந்தத் தொகுதியை அ.தி.மு.க தொடர்ந்து மூன்றாவது முறையாக தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. முஸ்லீம் லீக்கிற்கு ஆம்பூர் தொகுதி சாதகமாக இருக்கும் சூழலில், அமைச்சர் தடையாக நிற்கும் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தை சிதைக்கும் செயலாகும்’’ என்கின்றனர் கொதிப்போடு.

இந்த விவகாரத்தால், ஆம்பூர் தொகுதி தி.மு.க கூட்டணி ஆட்டம் கண்டிருக்கிறது.

Loading…

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கம்யூனிஸ்டுகளின் 'இரட்டை இலக்கு' கனவும் ஸ்டாலினின் 'கறார்' முடிவும்! – எப்போ முடியும் பங்கீடு?

தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப்...

“முடிந்த பணிக்கு மீண்டும் டெண்டரா?” – தூத்துக்குடி மாநகராட்சியில் சர்ச்சை!

தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரே பணிக்கு இரண்டு முறை டெண்டர் விடப்பட்டதாகக் கூறப்படும்...

விமர்சிக்கப்பட்ட‌ ராஜ்ய சபா வருகை விவகாரம்: `சம்பளம் வாங்க மட்டுமே சபைக்கு போகல!' – அன்புமணி தரப்பு

தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் டாக்டர் அன்புமணி. அதிமுக சார்பில்...

LPG விலை உயர்வு: “உண்மையிலேயே தட்டுப்பாடு உள்ளதா அல்லது…" – மம்தா பானர்ஜி எழுப்பும் கேள்வி!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் சமையல்...