3
September, 2025

A News 365Times Venture

3
Wednesday
September, 2025

A News 365Times Venture

“ஞானசேகரன், ஃப்ளைட் மோடுக்கு பின்… அதில்தான் அந்த சார் ஒளிந்து இருக்கிறார்!” – அண்ணாமலை

Date:

அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், மாணவி அளித்த புகாரின்படி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் கடந்த மே மாதம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, ஜூன் 2ஆம் தேதி இந்த வழக்கில் தண்டனை விவரத்தை வெளியிட்ட நீதிமன்றம், அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில், திமுக நிர்வாகி ஞானசேகரனுக்கு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் யாரை காப்பாற்றத் துடிக்கிறது இந்த திமுக அரசு? சில விடைகளும், பல கேள்விகளும் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அண்ணாமலை

அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ” டிசம்பர் 23ம் தேதி, 2024ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருக்கும் சகோதரிக்கு மிக மோசமான, கோரமான ஒரு பாலியல் வன்கொடுமை நடந்தது நமக்கு தெரியும். 23ம் தேதி நடந்த பாலியல் சம்பவத்திற்கு 25-ம் தேதி ஒரு குற்றவாளியை கைது செய்தார்கள்.

25ம் தேதி காலையில் இருந்து ஒரு சாமானிய மனிதனாக நானும் பேச ஆரம்பித்தேன். 25ம் தேதி இரவு கைது செய்யப்பட்ட ஞானசேகரன் யார் எந்த கட்சியை சேர்ந்தவன் என்று அதையும் நாங்கள் உங்கள் முன் வைத்தோம். எல்லா அரசியல் கட்சிகளும் போராடினார்கள். சம்பவம் நடந்த அந்த சமயத்தில் இருந்து 8.52 வரை ஞானசேகரனின் செல்போன் ஃப்ளைட் மோடில் இருந்தது என அரசு தரப்பு வழக்கறிஞர் சொல்லி இருக்கிறார். உண்மையில் அது அப்போது ஃப்ளைட் மோடில் தான் இருந்தது.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்றதா?

ஆனால், சம்பவம் நடந்தபிறகு 8.55க்கு ஞானசேகரன் தனது போனில் இருந்து காவல்துறை அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு பேசி இருக்கிறார். பிறகு ஆறு நிமிடம் கழித்து அந்தக் காவல்துறை அதிகாரி 9.01க்கு ஞானசேகரனுக்கு போன் செய்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்றதா?

குற்றம் நடந்த மறுநாள் 24ஆம் தேதி அந்தப் பகுதியைச் சேர்ந்த திமுக வட்ட செயலாளர் கோட்டூர்புரம் சண்முகமும், ஞானசேகரனும் காலை 7.24 முதல் மாலை 4.01 மணி வரை ஐந்து முறை போனில் பேசியுள்ளனர். அதன்பிறகுதான் ஞானசேகரனை கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். வெளியே வந்தபிறகு மீண்டும் ஞானசேகரனும் கோட்டூர்புரம் சண்முகமும் பேசியுள்ளனர்.

ஞானசேகரன் தண்டனை தீர்ப்பு
ஞானசேகரன்

இதுமட்டுமின்றி, அன்று இரவு 8.30 மணிக்கு ஞானசேகரன் வெளியே வந்த பிறகு கோட்டூர்புரம் சண்முகமும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் தொலைப்பேசியில் பேசியுள்ளனர். அதேபோல், 8.32க்கு மறுபடியும் இருவரும் பேசியுள்ளனர். அதேபோல், கோட்டூர் சண்முகமும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் நடராஜனும் நான்கு நாட்களில் 13 முறை போனில் பேசியுள்ளனர். இதில், குறிப்பாக 24-ம் தேதி இரவு கோட்டூர்புரம் சண்முகம் 8.59 மற்றும் 9.07 என இருமுறை தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடமும் பேசியுள்ளார்.

யார் அந்த சார்?

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க., வட்டச் செயலாளர் கோட்டூர்புரம் சண்முகம் ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள். 25ம் தேதி மீண்டும் ஞானசேகரனை கைது செய்த பிறகு அண்ணா பல்கலை கேமரா வேலை செய்யவில்லை என போலீசார் சொல்கிறார்கள். யார் அந்த சார் என்ற கேள்வியை முதலில் இருந்து கேட்கிறோம்.

முதல்வருக்கு இரண்டு பொறுப்புகள் இருக்கிறது. 24ம் தேதி பல விஷயங்கள் நடந்து இருக்கிறது. நான் எதற்கும் பயப்பட மாட்டேன். உடும்பு பிடியாக பிடித்து கடைசி வரை இதுதொடர்பாக பேசுவேன். அண்ணா பல்கலை மாணவியின் சகோதரன் ஆக நான் சாட்டையால் அடித்து கொண்டேன். கேள்விகள் தொடர்ந்து கேட்போம். ஆளும் கட்சியில் யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது. 4ம் தேதி ஞானசேகரனை விடுதலை செய்து ஆதாரங்களை அழிக்க யார் எல்லாம் உடந்தையாக இருந்தார்களோ அவர்களுக்கும் குற்றவாளிகள் தான். அதில்தான் யார் அந்த சார் என்பவர் ஒளிந்து இருக்கிறார்” என்று சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...