16
March, 2025

A News 365Times Venture

16
Sunday
March, 2025

A News 365Times Venture

சென்னை ஐசிஎஃப் ஹைப்பர்லூப் திட்டம்: "விரைவில் இந்தியாவில் ஹைப்பர்லூப் போக்குவரத்து" -அஸ்வினி வைஷ்ணவ்

Date:

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னை தையூரில் உள்ள ஐ.ஐ.டிக்கு நேற்று வந்திருந்தார். அங்கே ஹைப்பர்லூப் திட்டத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பார்வையிட்ட அவர் பேசியதாவது…

“சென்னை ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள இந்த 410 மீட்டர் நீளமுள்ள ஹைப்பர்லூப் சோதனை குழாய்தான் ஆசியாவிலேயே மிக நீண்ட ஹைப்பர்லூப் சோதனையமைப்பு ஆகும். ஹைப்பர்லூப் போக்குவரத்துக்கான சோதனை அமைப்பு முழுவதும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நமது இளம் கண்டுபிடிப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

தற்போது வளர்ந்துவரும் இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து தொழில்நுட்பம், இதுவரையிலான சோதனைகளில் நல்ல பலன்களைத் தந்துள்ளன. இதனால், விரைவில் ஹைப்பர்லூப் போக்குவரத்துக்கு இந்தியாவில் தயாராகிவிடும்.

இந்த ஹைப்பர்லூப் திட்டத்திற்காக மத்திய அரசின் ரயில்வே அமைச்சகம் நிதி உதவியும், தொழில்நுட்ப உதவியும் வழங்கி வருகின்றன. இனி இந்த ஹைப்பர்லூப் திட்டத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் முழுவதும் சென்னை ஐசிஎஃப்- ல் மேம்படுத்தப்படும். ஐசிஎஃப் தொழிற்சாலையில் திறமையான வல்லுநர்கள் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்களுக்கான பெரிய சவாலான அதிக திறனுள்ள எலக்ட்ரானிக்ஸ் அமைப்புகளைத் திறம்பட மேம்படுத்தியுள்ளனர். அதேபோல, இந்த ஹைப்பர்லூப் திட்டத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பமும் ஐசிஎஃப்-ல் மேம்படுத்தப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா அனைத்து துறைகளில் முன்னணியில் இருக்கும் நாடாக விளங்குகிறது. தரவு அறிவியல், செயற்கை தொழில்நுட்பம் மற்றும் செமி கண்டக்டர் ஆகிய துறைகளில் நமது இளைஞர்கள் திறமையாகச் செயல்பட்டு வருகிறார்கள். உலகிலேயே இந்தியாவில்தான் திறமையான இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றப் பெரிதும் பங்காற்றுவார்கள். இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் தயாரான முதலாவது செமி கண்டக்டர் பயன்பாட்டிற்கு வரும்” என்று கூறினார்.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

TNBudget 2025: 'பட்ஜெட்டில் 'ரூ' மாற்றம் எதற்கு?'- முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் எழுந்த சர்ச்சையில், தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு அலை...

`புத்தாண்டு, ஹோலி…' அடிக்கடி வியட்நாம் செல்லும் ராகுல் காந்தி; காரணம் கேட்கும் பாஜக

மத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தற்போது தனிப்பட்ட பயணமாக வியட்நாம்...

Modi: 'நினைத்துப்பார்க்க முடியாத துயரம்' – கோத்ரா ரயில் எரிப்பு, 2002 கலவரம் பற்றி பேசியதென்ன?

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் லெக்ஸ் ஃப்ரித்மேன் உடன்...

US Strike: 'ஏமன் மீது அமெரிக்க நடத்திய மிகப்பெரிய தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு' – பின்னணி என்ன?

'காசா போரை நிறுத்த வேண்டும்...','உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்'... - இப்படி...