12
April, 2026

A News 365Times Venture

12
Sunday
April, 2026

A News 365Times Venture

“சீனா பெரிய பிரச்னைகளை சந்திக்கும்" – எச்சரிக்கும் அதிபர் ட்ரம்ப்; பின்னணி என்ன?

Date:

ஈரான் – அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், இரு தரப்பினரும் அப்பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிக அளவிலான இராணுவ இருப்பை இன்னும் பராமரித்து வருகின்றனர். அமெரிக்க போர்க்கப்பல்களும் படைகளும் ஈரானுக்கு அருகில் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சமீபத்திய அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் சேதமடைந்த வான் பாதுகாப்பு திறன்களை ஈரான் சீனாவின் உதவியுடன் விரைவாக மீண்டும் கட்டமைக்க முயன்று வருவதாக நம்பப்படுகிறது.

ட்ரம்ப்

மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாகியுள்ள ஈரானுக்கு, சீனாவும் ரஷ்யாவும் தொடர்ந்து இராணுவப் பங்காளிகளாக இருந்து, அவசியமான இராஜதந்திர மற்றும் பொருளாதார ஆதரவை வழங்கி வருகின்றன என அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது.

வரும் வாரங்களில் ஈரான் புதிய சீன வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பெறக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறையின் தகவலை மேற்கோள் காட்டி CNN செய்தி வெளியிட்டிருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளை சீனா கடுமையாக நிராகரித்துள்ளது. வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், “சீனா மோதலில் ஈடுபட்டுள்ள எந்தத் தரப்புக்கும் ஒருபோதும் ஆயுதங்களை வழங்கியதில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும், பரபரப்பூட்டும் செய்திகளையும் தவிர்க்குமாறு அமெரிக்காவுக்கு வலியுறுத்துகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்பினால் சீனா பெரிய பிரச்னைகளை சந்திக்கும்.

ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்
ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்

ஈரானுடன் அமெரிக்கா மிக ஆழமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. ஒருவேளை அவர்கள் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம், அல்லது செய்துகொள்ளாமலும் போகலாம். எது நடந்தாலும் சரி, வெற்றி எங்களுக்கே. ஓர் ஒப்பந்தம் உருவானாலும் அது எனக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிசெய்யும் வகையில், அமெரிக்காவின் கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன” எனக் குறிப்பிட்டார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஜன நாயகன் படக் கசிவு: "தேர்தலைக் குறிவைத்து நடத்தப்பட்ட திட்டமிட்ட அரசியல் சதி" – அன்புமணி காட்டம்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணியில் இருக்கும் அன்புமணி தரப்பு பா.ம.க...

`48 மணி நேரம் ஓய்வு' – வானதி சீனிவாசன் சிகிச்சை குறித்து மருத்துவமனை விளக்கம்

கோவை வடக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசன், தொகுதிக்கு உட்பட்ட...

இஸ்லமாபாத்தில் அமைதி பேச்சுவார்த்தை: அமெரிக்கா ரெடி; கடைசி நேரத்தில் முரண்டு பிடிக்கும் ஈரான்

பாகிஸ்தான் நேரப்படி, இன்று காலை பாகிஸ்தானின்‌ தலைநகரான இஸ்லமாபாத்தில் பேச்சுவார்த்தை நடக்க...