7
April, 2026

A News 365Times Venture

7
Tuesday
April, 2026

A News 365Times Venture

"சீக்கிரம் ஈரான் போர் முடிய வேண்டும்; இல்லை, எங்களுக்கு 'இது' கிடைக்காது" – ஜெலன்ஸ்கி

Date:

ரஷ்யா – உக்ரைன் போர்‌ குறித்து பேசி கொண்டிருந்தவர்கள்… பேசாதவர்கள் என அனைத்து தரப்பும் இப்போது ஈரான் போர் குறித்து பேசுகிறார்கள்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உக்ரைன் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியே நீண்ட நாள்கள் ஆகிவிட்டன.

ஐரோப்பிய நாடுகளும் இப்போது ஈரான் போர், அதனால், தங்களுக்கு ஏற்படும் தாக்கம் பற்றி பேசி கொண்டிருக்கின்றனர்…‌ அதற்கு எதிர்வினையாற்றி கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

புதின் – அமெரிக்கா – ஜெலன்ஸ்கி

அதில் அவர், “ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்தால், உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுத்து வரும் ஆதரவு குறைந்துவிடும்.

உக்ரைன் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ஏவுகணையை வெகுவாக நம்பியுள்ளது. ஏற்கெனவே, இவை உக்ரைனுக்கு குறைந்த அளவில் தான் கொடுக்கப்படுகின்றன. இந்தப் போர் தொடர்ந்தால், இந்த எண்ணிக்கை இன்னும் குறையும்.

இந்த ஏவுகணைகள் மூலம் ரஷ்யா ஏவும் ஏவுகணைகளிடம் இருந்து உக்ரைனைப் பாதுகாத்து வர‌ முடிகிறது.

இப்போது இன்று உக்ரைன் யாருக்கும் முன்னுரிமையாக இல்லை. அதனால் தான், இந்தப் போர்‌ நீடித்தால் உக்ரைனுக்கு குறைந்த ஆதரவே கிடைக்கும் என்று பயமாக இருக்கிறது” என்று பேசியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கரூர்: 'கடவூர் ஒன்றியத்தை மேம்படுத்த இவற்றைச் செய்யலாம்…' – வேட்பாளர்களுக்கு இளைஞரின் வேண்டுகோள்

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது கிருஷ்ணராயபுரம் (தனி)...

சாத்தான்குளம் வழக்கு: ”பிற அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?”- ஹென்றி திபேன் கேள்வி

தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என...

ரூ.1048 கோடி சொத்து: 'தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்!' – லால்குடி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ்

அ.தி.மு.க சார்பில் திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்...

ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடமா? – 'கோம் நகரில் தீவிர சிகிச்சை?' – உளவுத்துறை தகவல்!

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய...