24
April, 2025

A News 365Times Venture

24
Thursday
April, 2025

A News 365Times Venture

சமாதானபுரம்: அகற்றப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அமைக்கப்படுமா? – வெயிலில் சிரமப்படும் பயணிகள்

Date:

திருநெல்வேலி நகரின் முக்கிய பகுதியான சமாதானபுரத்தில் அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வல்லநாடு, திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் மற்றும் டவுன் (நகரப் பகுதிகள்) நோக்கிப் பயணிக்கும் பேருந்துகள் நின்று செல்கின்றன.

மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் இந்தப் பேருந்து நிறுத்தத்தின் இருபுறமும், பயணிகள் வெயிலிலும் மழையிலும் பாதுகாப்பாகக் காத்திருக்க இரண்டு நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் கடந்த ஜனவரி மாதம், சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக, அந்த இரண்டு நிழற்குடைகளும் அகற்றப்பட்டுவிட்டன.

இதனால் தற்போது, கொளுத்தும் வெயிலில் மக்கள் நிழலின்றி நிற்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். குறிப்பாக, மூத்த குடிமக்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். நிறைய நேரங்களில் மக்கள் ஒதுங்கக்கூட இடம் இல்லாமல் நேரடியாக வெயில் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், பெரியவர்கள்  அமர்வதற்கும் வசதி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

“நிழற்குடைகள் இருந்தபோது நிழலில் நின்று ஓய்வெடுக்க முடிந்தது. இப்போது வெயிலில் நின்று காத்திருக்க வேண்டியுள்ளது. பெரியவர்களும் குழந்தைகளும் மிகவும் சிரமப்படுகிறார்கள்” என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கிறது. எனவே மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் இந்த விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Pahalgam Attack: "சாவின் விளிம்பிலிருந்து தப்பினோம்" – காஷ்மீர் தாக்குதல் குறித்து சென்னைப் பெண்

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட ...

Pahalgam Attack: “உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்!'' -முதல்வர் உமர் அப்துல்லா அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் மாநிலத்தில் நேற்று பயங்கர தீவிரவாத தாக்குதல்...

Pahalgam Attack: பின்னணியில் `TRF’ தீவிரவாதக் குழு… யார் இவர்கள்? | முழுத் தகவல்

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியாவிற்கு வந்திருக்கிறார். இந்தியப் பிரதமர் மோடி...

Pahalgam Attack: 'உளவுத்துறையின் தோல்வி இது; மோடி அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்..' – அசாதுதின் ஓவைசி

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட ...