11
February, 2026

A News 365Times Venture

11
Wednesday
February, 2026

A News 365Times Venture

`கூட்டணி ஆட்சியா ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்!' – ஸ்டாலினுக்கு காங்கிரஸ் பதிலடி

Date:

‘India Today’ ஊடகத்தின் கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருந்தார்.

அவரிடம் காங்கிரஸ் கட்சி உடனானக் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், “ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று காங்கிரஸுக்கும் நன்றாக தெரியும். திமுக கூட்டணி நன்றாக இருக்கிறது. தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி வலுவாகத் தொடரும்.

ஸ்டாலின், ராகுல் காந்தி

மற்றவர்கள் நினைப்பது நடக்காது. அரசியலைத் தாண்டி ராகுல் காந்தி என்னை ஒரு சகோதரனாகப் பார்க்கிறார். நானும் அவரை அப்படி தான் பார்க்கிறேன்.

எத்தனை கூட்டணி தமிழகத்தில் அமைந்தாலும் தேர்தலில் திமுக தான் வெல்லும். அரசியலில் களம் புகுந்ததில் இருந்து உழைத்து வருகிறேன். யார் காலிலும் விழந்து முன்னேறக் கூடாது.

உரிமைக்கு குரல் கொடுப்போம். உறவுக்கு கைக்கொடுப்போம் என்று கலைஞர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்” என்று பேசியிருந்தார்.

இதன் மூலம் காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை என்பதை ஸ்டாலின் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

அப்பதிவில், ” மக்கள் முடிவு செய்வார்கள் . கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை . 2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது தமிழக காங்கிரஸ் கட்சியின் தவறு” என்று பதிவிட்டிருக்கிறார்


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

புதுச்சேரியில் நாளை பந்த்! ஸ்தம்பிக்கப்போகும் `பிரெஞ்சு சிட்டி’ – தொழிற்சங்கங்கள் போர்க்கொடி

மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்திருக்கும் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு...

அதிமுக: `எமெர்ஜென்சி ஆதரவு; பாஜக-வின் நட்பு; யாருக்குமில்லா அந்த துணிச்சல்!' | கூட்டணி சர்க்கஸ் 5

அதிமுககூட்டணி சர்க்கஸ் 5ஏறுகிற மேடையிலெல்லாம் 1967 மற்றும் 1977 இல் நிகழ்ந்ததைப்...

மகாராஷ்டிரா: பாஜகவிற்கு மேயர் தேர்தலில் கைகொடுத்த உத்தவ் தாக்கரே; உட்கட்சி மோதலால் காங்கிரஸ் தோல்வி

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் நடந்த மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க அதிகப்படியான இடங்களைப்...

தவெக: 'வேட்பாளரை இப்படித்தான் தேர்வு பண்ணப் போறோம்' – ஆனந்த் போட்ட கண்டிஷன்; அப்செட்டில் மா.செக்கள்?

விருப்ப மனு விநியோகம் ஆன்லைன் மூலமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், திடீரென...