9
May, 2025

A News 365Times Venture

9
Friday
May, 2025

A News 365Times Venture

“காப்பாற்றியவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்தான்.. பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது'' – மெகபூபா முஃப்தி

Date:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 24 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்தத் தாக்குதலுக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். சிலர் இந்தத் தாக்குதலை மதத்துடன் தொடர்புப்படுத்தி பேசி வருகின்றனர். இந்நிலையில் இதுத்தொடர்பாக,  ஜம்மு & காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான மெஹ்பூபா முஃப்தி பேசியிருக்கிறார்.

பஹல்காம் தாக்குதல்

“பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின்போது சுற்றுலாப் பயணிகளை மீட்டதுடன், மருத்துவமனையில் அவர்களுக்கு தங்கள் ரத்தத்தை கொடுத்து காப்பாற்றியது காஷ்மீர் முஸ்லிம்கள்தான்.

அதன்பிறகுதான் சம்பவ இடத்துக்கு ராணுவமும், பாதுகாப்புப்படைகளும், அரசும் உதவ வந்தன. காயமடைந்தவர்களை மைல் கணக்கில் நடந்துச்சென்று காப்பாற்றிய சஜ்ஜாத் பற்றியோ, டாக்சி ஓட்டுநர் பற்றியோ, காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த ஆதில்ஷா பற்றியோ பலரும் பேசவில்லை.

காப்பாற்றியவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்தான். இவர்கள் அனைவரும் காஷ்மீரிகள். நாங்கள் (காஷ்மீரிகள்) பயங்கரவாதிகள் அல்ல, பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது.

மெகபூபா முஃப்தி
மெகபூபா முஃப்தி

நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் கொடூரமாகத் தாக்கப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. அதற்காக ஒவ்வொரு இந்துவும் தாக்குதல் நடத்துவதாக சொல்லமுடியாது” என்று காட்டமாகப் பேசியிருக்கிறார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

3 புறமும் பாகிஸ்தான்; ஒரே சாலை தான் வழி – போர் பதற்றமின்றி இருக்கும் இந்த பஞ்சாப் கிராம மக்கள்!

காஷ்மீரில் கடந்த மாத இறுதியில் தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய...

India – Pakistan Tension: நேற்று தொடங்கிய இந்தியா – பாக். தாக்குதல்; இதுவரை நடந்தது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முதல் கடும் தாக்குதல் நடந்து...

கழுகார்: `சாம்பிராணி போட்ட காக்கி மாஜி டு பாலியல் வழக்கு தொழிலதிபரிடம் கார் வாங்கிய மாவட்டப் புள்ளி!

பூகம்பங்களைக் கிளப்பவிருக்கும் ‘கிங்’ புள்ளி!சாம்பிராணி போட்ட காக்கி மாஜி...கட்சிக்காக உழைத்த சீனியர்கள்...

India – Pakistan Tension: ‘விமான டிக்கெட்டுகளை கட்டணமின்றி ரத்து செய்யலாம்’ – இண்டிகோ அறிவிப்பு

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  இந்தியா 'ஆபரேஷன்...