முதல்வர் மு.க. ஸ்டாலினின் மாமாவும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த சகோதரியின் மகனுமான அமிர்தத்தின் பேத்தி இலக்கியா – டாக்டர். கிரிதரா திருமண நிச்சயதார்த்தம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. முதல்வர் உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்து உறவுகள் அனைவரும் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
கருணாநிதியின் மருமகனும் கலைஞர் தொலைக்காட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்தவருமான அமிர்தம் – வசந்தா தம்பதியின் மகள் வழிப் பேத்தி இலக்கியா. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையில் உயரதிகாரியாக இருக்கும் சதீஷ்குமாரின் மகள்.
இவருக்கு டாக்டர் கிரிதரா என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருக்கிறது. இருவருக்கிடையிலும் காதல் மலர்ந்து அது இரு வீட்டுத் தரப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட, பெரியவர்கள் சம்மதத்துடன் நாளை நடக்கவிருக்கிறது நிச்சயதார்த்த நிகழ்ச்சி.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நாளை மாலை நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட கலைஞர் கருணாநிதி குடும்ப உறவுகள் எல்லோரும் கலந்து கொள்ள இருப்பதாக தெரியவருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமிர்தம் மீது எப்போதுமே தனிப் பிரியம் உண்டு. ‘அப்பாவிடம் கூட அடி வாங்கியது கிடையாது, ஆனால் அமிர்தம் மாமாவிடம் அடி வாங்கியிருக்கிறேன். அதனால் எப்போதும் அவரிடம் ஒரு பயம் உண்டு. அந்தளவுக்கு கண்டிப்போடு வளர்த்தவர்’ என அமிர்தம் குறித்து அவர் முன்பொருமுறை அவர் பேசியது நினைவிருக்கலாம்.
இலக்கியா – கிரிதரா ஜோடியின் திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படுமென்கிறார்கள்.




