27
February, 2026

A News 365Times Venture

27
Friday
February, 2026

A News 365Times Venture

`ஓ.பன்னீர்செல்வம் செய்தது துரோகத்தின் உச்சக்கட்டம்!' – திமுகவில் இணைந்தவரை விளாசும் அதிமுக

Date:

அ.தி.மு.க-வில் நீண்டகாலம் முக்கிய பொறுப்புகளை வகித்த ஓ.பி.எஸ்., 2017-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதலமைச்சராகப் பதவியேற்றார். அதற்குப்பின் நிலவிய அதிகாரப் போட்டியில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால், கடந்த 2022-ல் ஓ.பி.எஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, ‘அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழு’ என்ற பெயரில் தனிப்பயணம் மேற்கொண்ட அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார்.

எனினும், எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க-வில் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்பது உறுதியான நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஏற்கனவே தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க-வில் இணைந்துவிட்டனர். அதையடுத்து சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓ.பி.எஸ் தி.மு.க ஆட்சியை பாராட்டியிருந்தார்.

புதுச்சேரி அதிமுக மாநில செயலாலர் அன்பழகன்

அப்போது, `தி.மு.க-வில் இணைவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, `பொறுத்திருந்து பாருங்கள்’ என சஸ்பென்ஸ் வைத்தார். இந்த நிலையில்தான் இன்று தன் மகன் ரவீந்தரநாத் மற்றும் ஆதரவாளர்களுடன் அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க-வில் இணைந்திருக்கிறார் ஓ.பி.எஸ்.

இது குறித்து ஜூனியர் விகடனிடம் பேசிய புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநில செயலாளர் அன்பழகன், “ஓ.பி.எஸ்ஸின் இந்த செயல் இது துரோகத்தின் உச்சக்கட்டம். சாதாரண டீ கடையில் இருந்த ஓ.பி.எஸ்சை, மறைந்த மாண்புமிகு ஜெயலலிதா அம்மா அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை தேர்வு செய்தார்கள்.

அந்த நன்றியை மறந்து புரட்சித் தலைவி சிறை செல்வதற்கும், அதன்பிறகு அவரது மரணத்துக்கும் காரணமாக இருந்த தி.மு.க-வுடன் கைகோர்த்திருப்பது கடைந்தெடுத்த துரோகத்தின் உச்சகட்டம்” என்று காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"தீய சக்தி திமுக-வை தாய் கழகம் என்று நினைத்து கொண்டு.!"- ஓ.பி.எஸ் குறித்து சசிகலா

அதிமுகவில் மூன்று முறை முதலமைச்சராகவும், 5 முறை எம்.எல்.ஏ வாகவும் ...

'எனக்கு தான் சீட்!' முட்டி மோதும் உடன்பிறப்புகள் – 'ஹைப்' ஏற்றும் நிலவரம்! பரபரக்கும் புதுக்கோட்டை

சுதந்திர இந்தியாவோடு கடைசியாக இணைந்த சமஸ்தானம், முதல் பெண்  மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி, நடிகர்கள் பி.யூ.சின்னப்பா, ஜெமினி கணேசன் ஆகியோர் பிறந்த பகுதி என்று புதுக்கோட்டை தொகுதிக்கு நிரம்ப வரலாறு இருக்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற  தொகுதிகளில் ஒன்றாக விளங்கும் தொகுதி புதுக்கோட்டை. வியாபார நிறுவனங்கள், நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாய பயிர்கள் சாகுபடி ஆகியவை தொகுதி மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்நிலையில், இந்த தொகுதியில் சீட் பெற...

முதலில் ராஜினாமா… பின் திமுக! – முடிவெடுத்த ஓபிஎஸ்?

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு,...