20
February, 2026

A News 365Times Venture

20
Friday
February, 2026

A News 365Times Venture

"ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!" – திமுகவில் இணைந்த தேமுதிகவை விமர்சித்த பாஜக

Date:

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது.

தேமுதிக, திமுகவில் இணையுமா? அதிமுகவில் இணையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில் இன்று ( பிப்.19) தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறார்.

திமுகவில் இணைந்த தேமுதிக

இந்நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிக இன்று (பிப்.19) அதிகாரப்பூர்வமாக இணைந்ததை பாஜக விமர்சித்திருக்கிறது.

பாஜக வெளியிட்டிருக்கும் பதிவில், “தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள்.

அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக.

அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!” என்று விமர்சித்துப் பதிவிட்டிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

இந்தியாவில் குறைந்த ஊழல்; ஆனால், ஒரு கவலைக்குரிய விஷயம்! – ஜெர்மனி நிறுவனத்தின் அறிக்கை சொல்வதென்ன?

சமீபத்தில், ஜெர்மனி பெர்லினைச் சேர்ந்த 'Transparency International' என்ற அரசு சாரா...

விஜய்: 23-ம் தேதி வேலூர் வருகை… பந்தல், நாற்காலி வசதியுடன் போலீஸ் 20 நிபந்தனைகள்!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரியில் வரும் 23-ம் தேதி, த.வெ.க...

வடிவேலுவை வைத்து வசை பாடிய திமுக; கட்சியை உடைத்த அதிமுக! – தேர்தலில் தேமுதிக கடந்த பாதை!

தேசிய முற்போக்கு திராவிட கழகம், முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது...

`தேர்தலில் எதிர்த்ததால் 5 வருடம் சம்பளம் போடவில்லை!' – திமுக நிர்வாகிக்கு எதிராக குமுறும் ஆபரேட்டர்

கும்பகோணம், திருப்பனந்தாள் அருகே உள்ள மணலூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரின்...