13
March, 2026

A News 365Times Venture

13
Friday
March, 2026

A News 365Times Venture

ஒப்பந்ததாரரைப் பார்த்து அரிவாளை ஓங்கினாரா திமுக முன்னாள் எம்எல்ஏ? வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

Date:

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயில் நகரில் தீயணைப்புத் துறைக்குப் புதிய கட்டிடம் ரூ 2,50,00,000 மதிப்பீட்டில் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.

இந்தப் பூமி பூஜையை அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் தீயணைப்புத்துறை உயர் அதிகாரிகள், தி.மு.க கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இந்த நிகழ்வில் தனக்கு முறையான அழைப்பு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனக் கூறி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ உதயம் சண்முகம் தேங்காய் உடைக்கும் போது தகராறு செய்தார்.

uthayam sanmugam

அப்போது, அங்கிருந்த ஒப்பந்ததாரர் எதோ சொல்ல, ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் நின்ற பக்கம் அரிவாளைத் தூக்கிக் காண்பித்து ஆவேசப்பட்டார்.

இதனால், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன்பிறகு உதயம் சண்முகம் அங்கிருந்த சாமியான பந்தல் அருகே செல்ல, அங்கு வந்த ஒருவருடன் வாக்குவாதம் செய்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் ஒப்பந்ததாரரைப் பார்த்து அரிவாளைக் காட்டி மிரட்டியதாகச் சொல்லப்படும் சம்பவம், புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'கூட்டணிக்கு போகலாமா?'- அவசர மா.செக்கள் மீட்டிங்கில் ஆனந்த் கேட்ட கேள்வி; ட்விஸ்ட் கொடுக்கும் விஜய்?

தவெக சார்பில் திடீரென அவசர அவசரமாக கூட்டப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்...

ஈரான் தாக்குகிறதுதான்; ஆனாலும், மோதாமல் 'சைலன்ட்டாக' இருக்கும் வளைகுடா நாடுகள் – என்ன காரணம்?

ஈரான் மீது போர் தொடுத்தது என்னவோ அமெரிக்காவும், இஸ்ரேலும் தான். ஆனால்,...

ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து மும்பை வந்தடைந்த கச்சா எண்ணெய் கப்பல் – கைகொடுத்த `Dark Mode' டெக்னிக்!

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக ஹார்முஸ் ஜலசந்தியில் பல பில்லியன் பேரல்கள் கச்சா...

திருத்தணி: திமுக-வில் கோஷ்டி பூசல்; சசிகலா ஆதரவாளரால் நெருக்கடியில் அதிமுக -கட்சிகளில் நிலவரம் என்ன?

திருவள்ளூர் மாவட்டத்தில் முருகனின் அறுபடை வீடு அமைந்துள்ள திருத்தணி தொகுதியில் தெலுங்கு...