24
March, 2026

A News 365Times Venture

24
Tuesday
March, 2026

A News 365Times Venture

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமல் : என்னென்ன மாற்றங்கள் இடம்பெறுகின்றன? A டு Z பட்டியல்!

Date:

இதுவரை பின்பற்றி வரும் வருமான வரி சட்டம் 1962-ம் ஆண்டு அமலுக்கு வந்தது ஆகும். வருகிற 1-ம் தேதி முதல், புது வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது.

இந்தப் புதிய வருமான வரிச் சட்டத்தின் கொள்கைகள் மூன்று –

வெளிப்படைத் தன்மை, டிஜிட்டல் தன்மை மற்றும் தரத்தை உயர்த்துதல் ஆகும்.

அதன் வழியே வர உள்ள மாற்றங்கள் என்னென்ன என்பதை ஒவ்வொன்றாக பார்க்கலாம்… வாங்க…

வருமான வரி

இதுவரை வருமான வரித் தாக்கலுக்கு நாம் பயன்படுத்தி கொண்டிருந்த பல படிவங்களின் பெயர்கள் மாற உள்ளன. மாற இருக்கும் அந்தப் படிவங்களின் பெயர்கள்…

இப்போதிருக்கும் படிவங்களின் பெயர்கள் > புதிய வருமான வரிச் சட்டத்தின் கீழ் வர உள்ள படிவங்களின் பெயர்கள்

3CA, 3CB, 3CD > 26

16A > 131

24Q > 138

26Q > 140

27Q > 144

26AS > 168

‘வரி ஆண்டு’ என்றால் என்ன?

பழைய வருமான வரிச் சட்டத்தில், ‘முந்தைய ஆண்டு’, ‘மதிப்பீட்டு ஆண்டு’ என்று இரண்டு ஆண்டு கான்செப்ட் இருந்தது.

ஆனால், இனி ‘வரி ஆண்டு (Tax Year)’ மட்டுமே.

வரி ஆண்டு என்றால் என்ன என்பதை உதாரணத்தோடு பார்ப்போம்.

2026-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து 2027-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை சம்பாதிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.

வருமான வரி
வருமான வரி

பழைய சட்டத்தின் படி, இந்த ஆண்டை ‘முந்தைய’ ஆண்டு என்று குறிப்பிடுவோம்.

இதற்கு வருமான வரித் தாக்கல் முதல் வருமான வரிக் கட்டுதல் வரை 2027-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2028-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை செய்வோம்.

இதை ‘மதிப்பீட்டு ஆண்டு’ என்று குறிப்பிடுவோம்.

வருமான வரித் தாக்கலின் போது, 2026-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து 2027-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரையிலான வருமானத்திற்கு ‘மதிப்பீட்டு ஆண்டு’ என்று கிளிக் செய்து தாக்கல் செய்வோம்.

இனி அது தேவையில்லை.

புதிய சட்டத்தின் படி, 2026-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து 2027-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை ‘வரி ஆண்டு’ என்று கூறுவோம்.

வருமான வரித் தாக்கலின் போது, இனி இரண்டு ஆப்ஷன்கள் இருக்காது.

இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால், ‘நிதி ஆண்டு’ என்று நாம் குறிப்பிடுவது தான், இனி ‘வரி ஆண்டு’ ஆகும்.

HRA
HRA

புதிய சட்டத்தின் கீழ், சம்பளதாரர்கள் சந்திக்க உள்ள மாற்றங்கள்…

> HRA விலக்கு

இந்த விலக்கு பழைய வரி முறையைத் தேர்வு செய்திருப்பவர்களுக்கு மட்டுமே.

முன்பு, இந்த விலக்கு டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவில் வசிப்பவர்களுக்கே கிடைத்து வந்தது. இப்போது இந்த நகரங்களின் பட்டியலில் ஹைதராபாத், பூனா, அகமதாபாத் மற்றும் பெங்களூருவும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

HRA விலக்கு எப்படி வழங்கப்பட உள்ளது?

உதாரணத்திற்கு, ராஜிற்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் அடிப்படை சம்பளம் என்று வைத்துக்கொள்வோம்.

இவருக்கு வழங்கப்படும் HRA – ரூ.4.5 லட்சம்.

அடிப்படை சம்பளத்தில் 10 சதவிகிதம் எவ்வளவு – ரூ.1 லட்சம்.

இப்போது HRA-ல் இருந்து 10 சதவிகித அடிப்படை சம்பளம் கழிக்கப்பட வேண்டும். ராஜிற்கு கழித்தால் ரூ.4 லட்சம் வரும். இந்த 4 லட்சம் தான் ராஜிற்கு கிடைத்துள்ள HRA வரி விலக்கு.

HRA-ல் இருந்து மீண்டும் மேலே வந்த 4 லட்சத்தைக் கழித்தால், ரூ.50 ஆயிரம்.

ஆக, ராஜ் இந்த ரூ.50 ஆயிரத்திற்கு வரி கட்ட வேண்டும்.

படிப்பு செலவு
படிப்பு செலவு

குழந்தைகள் படிப்பு செலவு விலக்கு

இந்த விலக்கும் பழைய வரி முறையைப் பின்பற்றுபவருக்கு மட்டுமே…

குழந்தைகளின் கல்விச் செலவுகளில்… ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.3,000 வரையில் விலக்கு அளிக்கப்படும். இது முன்பு ரூ.100 ஆக இருந்தது.

குழந்தைகளின் ஹாஸ்டல் செலவுகளில்… ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.9,000 வரையில் விலக்கு அளிக்கப்படும். இது முன்பு ரூ.300 ஆக இருந்தது.

ஆனால், இந்த விலக்கு இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே.

முன்பெல்லாம் வாடகை கட்டினேன்… வீட்டுக் கடன் எடுத்தேன் என்று கொஞ்சம் எளிதாக வருமான வரி விலக்கு பெற முடிந்தது.

ஆனால், புதிய சட்டத்தின் கீழ், சரியான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் தான் இனி விலக்கு. இதற்கான சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

> ஒரு ஆண்டிற்கு ரூ.1 லட்சத்திற்கு மேல் வீட்டு வாடகைக் கட்டினால், வீட்டு உரிமையாளரின் பான் கார்டை தாக்கலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

> வீட்டுக் கடனுக்கு வட்டி சலுகையைப் பெற, எங்கிருந்து கடன் வாங்கியிருக்கிறோமோ, அந்தத் தகவலை இணைக்க வேண்டும்.

> LTA (Leave Travel Allowance) வரிச் சலுகைப் பெற, டிராவல் சம்பந்தமான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

> சாப்டர் VI-A வரிக் குறைப்புகளைப் பெற, முதலீட்டு ஆவணங்களைத் தர வேண்டும்.

பரிசுப் பொருள்கள்
பரிசுப் பொருள்கள்

கவனிக்க வேண்டியவை…

> ஒரு வரி ஆண்டில் ரூ.15,000-க்கு மேல் பரிசு மற்றும் வவுச்சர்கள் பெற்றால், அதற்கு வரி செலுத்த வேண்டும்.

> வேலை நேரங்களில், வவுச்சர்கள் (Sodexo, Pluxee…) வழியாக கொடுக்கப்படும் உணவு மற்றும் பானங்களின் விலை ஒரு நேரத்திற்கு ரூ.200-ஐ தாண்டினால், அதற்கும் வரிக் கணக்கிடப்படும். இது பழைய வரி முறைக்கு மட்டும்.

> பணியாளர்கள் ரூ.2 லட்சம் வரை வாங்கப்படும் கடன்களுக்கு வரி இல்லை.

> விதிமுறை 18-ன் கீழ் குறிப்பிட்டுள்ள நோய்களுக்கு… மருத்துவக் காரணங்களுக்காக எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் வரி இல்லாமல் கடன் வாங்கிக் கொள்ளலாம்.

கடைசி தேதி மாற்றங்கள்

> இனி (ஆடிட் அல்லாத) ITR – 3 மற்றும் 4-ன் வருமான வரித் தாக்கல் தேதி ஆகஸ்ட் 31-ம் தேதி ஆகும். இது இந்த நிதியாண்டு (2025 – 26) முதலே தொடங்குகிறது.

ITR – 1 மற்றும் 2 தாக்கல் தேதியின் கடைசி தேதியில் எந்த மாற்றமும் இல்லை. அது வழக்கம் போல ஜூலை 1-ம் தேதி தான். அதுபோல, வரி ஆடிட்டிற்கான கடைசி தேதியும் அக்டோபர் 31-ம் தேதியாகவே தொடர்கிறது.

கடைசி தேதி
கடைசி தேதி

> திருத்தம் செய்யப்பட்ட வருமான வரித் தாக்கலை செய்ய கடைசி தேதி டிசம்பர் 31-ம் தேதியில் இருந்து மார்ச் 31-ம் தேதியாக மாற்றப்படுகிறது. ஆனால், டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு, தாக்கல் செய்யப்படும் திருத்தப்பட்ட தாக்கல்களுக்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டும்.

தாமதமாகவும் தாக்கல் செய்யப்படும் வருமான வரித் தாக்கலுக்கான கடைசி தேதியில் எந்த மாற்றமும் இல்லை.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'விசிக-வுக்கு 8 தொகுதிகள்!' சம்மதித்த திமுக.! ஒப்பந்தமாகும் கூட்டணி?

தி.மு.க - வி.சி.க கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்த...

`காலையில் வந்தார்கள், மாலையில் முடிந்தது; ஆனால் திமுக!' – தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி...

"ஏன், கார் வாங்கும் தகுதி கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?" – பிரேமலதா விஜயகாந்த் காட்டம்

தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று...

சாத்தான்குளம் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள்தான்!"- நீதிமன்றம் தீர்ப்பு

தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், 6 ஆண்டு விசாரணைக்குப்...