24
March, 2026

A News 365Times Venture

24
Tuesday
March, 2026

A News 365Times Venture

"ஏன், கார் வாங்கும் தகுதி கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?" – பிரேமலதா விஜயகாந்த் காட்டம்

Date:

தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (மார்ச்.23) ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “இதுவரைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளே இல்லாத கட்சி தேமுதிக. எப்படி கேப்டன் மீது குடிக்கிறார். போதை பழக்கத்திற்கு அடிமையாகிய உள்ளார் என்று தவறாக விமர்சனத்தை முன் வைத்தார்களோ.. அதேபோல தற்போது என் மீதும், கழகத்தின் மீதும் பேரம், பெட்டி என்ற விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.

பிரேமலதா விஜயகாந்த்

நான் கார் வாங்கியுள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். ஏன் ஒரு கார் வாங்கும் தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?

மக்களுக்காக 100 சதவிகிதம் உழைப்பை கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த். அவருக்கு பின்னால் இருந்தவள் நான் என்பது இந்த ஊர் அறியும்.

தேமுதிக 0.5% வாக்கு வைத்துள்ளது என்கிறீர்கள் பிறகு, ஏன் யூடியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் விவாதம் செய்கிறீர்கள்.

அதனை விட்டு விட வேண்டியது தானே. வாழ்த்தினாலும் தேமுதிக தான் விமர்சித்தாலும் தேமுதிக தான் உயர்த்து பிடித்தாலும் தேமுதிக தான்.” என்று பேசியிருக்கிறார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

தொடர்ந்து தேமுதிகவுக்கு திமுக கூட்டணியில் சீட் குறைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு? பதிலளித்த அவர், “ஒரு கூட்டணி வெல்ல சில தொகுதிகளை விட்டு கொடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக தேமுதிக விட்டுக்கொடுக்கும். மற்றவர்கள் விட்டுக் கொடுக்கும் போது தேமுதிகவும் விட்டுக் கொடுப்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும் கட்சியில் விசுவாசிகளுக்கு தேர்தலில் முன்னுரிமை அளிக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`காலையில் வந்தார்கள், மாலையில் முடிந்தது; ஆனால் திமுக!' – தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி...

சாத்தான்குளம் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள்தான்!"- நீதிமன்றம் தீர்ப்பு

தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், 6 ஆண்டு விசாரணைக்குப்...

'கம்யூனிஸ்ட், விசிகவை விட அதிக சீட்டுதான்(?)' – மா.செ கூட்டத்தில் என்ன பேசினார் பிரேமலதா?

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலில்,...

'முதலமைச்சரின் வீட்டுக்கே சென்று கேட்டோம்.!' – 5 தொகுதிகளை ஒப்புக்கொண்டு வெதும்பிய பெ.சண்முகம்!

திமுக கூட்டணியில் இழுபறியாகவே நீடித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இறுதியாக...