2
March, 2026

A News 365Times Venture

2
Monday
March, 2026

A News 365Times Venture

"என் தந்தைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒருவர்…" – மதிமுக பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகல்

Date:

மதிமுக நிர்வாக குழு கூட்டம் நாளை (ஏப்ரல் 20) சென்னையில் நடைபெறும் நிலையில், கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக வைகோவின் மகனும், திருச்சி எம்.பி-யுமான துரை வைகோ அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் துரை வைகோ, “நம்முடைய இயக்கத் தந்தை அரசியலுக்கு வந்து இழந்ததுதான் அதிகம். அவர் பெற்றது தமிழ்நாட்டின் உரிமைக்கு போராடி வரும் “வாழ்நாள் போராளி” என்கிற விருது மட்டும்தான்.

மதுவிலக்கு போராட்டத்தில் கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட எனது பாட்டி மாரியம்மாள் அதனாலயே உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிர் துறந்தார்.

தலைவர் வைகோ மீது பழிச்சொல்லை வீசியதை தாங்க முடியாமல்தான் எங்கள் உறவினர் ஒருவர் உயிர் தியாகம் செய்தார்.

துரை வைகோ

சிவகாசி இரவி தீக்குளித்த போது எழுந்த மன வேதனையில் இருந்து தலைவர் மீள்வதற்குள் எங்கள் குடும்பத்தில் இந்த துயரமும் நிகழ்ந்தது.

அரசியல் பொது வாழ்வில் எங்கள் குடும்பம் ஒரு உயிரையே தந்திருக்கிறது. அதைக்கூட நாங்கள் தாங்கிக் கொண்டோம். தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர்.

நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில், கட்சியின் ‘முதன்மை செயலாளர் “என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை.

எனவே கழகத்தின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பேன்.

ஆனால், அதன் பிறகு தலைமைக் கழகத்தின் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன்.

என்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவுகூட சேதாரம் வந்து விடக்கூடாது என்றுதான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்.

அதே நேரத்தில் மறுமலர்ச்சி தி.மு.க-வின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

திருச்சி தொகுதி மக்கள் மகத்தான வெற்றிபெறச் செய்து தங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு என்னை அனுப்பி வைத்துள்ளார்கள்.

அந்த மக்களுக்காக ஒரு எம்.பி என்ற வகையில் கண்ணும் கருத்துமாக கடமையாற்றுவேன். எப்போதும் போல இயக்கத் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அரணாகவும் சுக துக்கங்களில் பங்கேற்கும் தோழனாகவும் இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

துரை வைகோ
துரை வைகோ

கடந்த ஏழு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளை கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தொடர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நம் தலைவர் மனம் கலங்கிவிடாமல் அவரைப் பாதுகாக்க வேண்டும் என்று இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“காங்கிரஸ், திமுகவை 'கோ-பேக்' சொல்லி திருப்பி அனுப்புங்கள்!" – புதுச்சேரியில் சீறிய பிரதமர் மோடி

புதுச்சேரிக்கு நேற்று வருகை தந்த பிரதமர் மோடி ரூ.2,714 கோடிக்கு வளர்ச்சி...

கர்நாடகா: கமேனி படுகொலைக்கு மினி ஈரான் கிராமத்தில் 3 நாள் பந்த் அனுசரிப்பு; கடைகள் அடைப்பு

ஈரானில் நேற்று முன் தினம் நடந்த அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில்...

பிரதமர் மோடி புதுச்சேரி வருகை; பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைப்பு | Photo Album

Modi: "மோசடி செய்வதில் திமுக அமைச்சர்களுக்கு இடையே போட்டி இருக்கிறது" -...

தொகுதி் பங்கீடு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த அறிவாலயம்… விசிக-வின் கணக்கு என்ன?

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தொடங்கியிருக்கும் நிலையில் மார்ச் 2-ம்...