7
July, 2025

A News 365Times Venture

7
Monday
July, 2025

A News 365Times Venture

உலகின் டாப் 10 வலிமையான நாடுகளின் பட்டியலை வெளியிட்ட Forbes… இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

Date:

பிரபல அமெரிக்க ஆங்கில பத்திரிகையான ஃபோர்ப்ஸ் (Forbes), 2025-ம் ஆண்டின் உலகின் டாப் 10 வலிமையான நாடுகளின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, தலைமைப் பண்பு, பொருளாதார செல்வாக்கு, அரசியல் அதிகாரம், பன்னாட்டு உறவு, ராணுவ பலம் ஆகியவற்றின் அடிப்படையில், பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் ரெய்ப்ஸ்டீன் தலைமையிலான BAV குழு ஆராய்ச்சியாளர்கள், U.S. News & World Report என்ற அமெரிக்க ஊடக நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பட்டியலைத் தயாரித்திருக்கின்றனர்.

அமெரிக்கா

1. அமெரிக்கா (America) – மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 30.34 ட்ரில்லியன் டாலர், மக்கள்தொகை 34.5 கோடி

2. சீனா (China) – GDP 19.53 டிரில்லியன் டாலர், மக்கள்தொகை 141.7 கோடி

சீனா

3. ரஷ்யா (Russia) – GDP 2.2 டிரில்லியன் டாலர், மக்கள்தொகை 8.4 கோடி

4. யுனைடெட் கிங்டம் (UK) – GDP 3.73 டிரில்லியன் டாலர், மக்கள்தொகை 6.9 கோடி

5. ஜெர்மனி (Germany) – GDP 4.92 டிரில்லியன், மக்கள்தொகை 8.54 கோடி

6. தென் கொரியா (South Korea) – GDP 1.95 டிரில்லியன், மக்கள்தொகை 5.17 கோடி

7. பிரான்ஸ் (France) – GDP 3.28 டிரில்லியன் டாலர், மக்கள்தொகை 6.65 கோடி

இஸ்ரேல்

8. ஜப்பான் (Japan) – GDP 4.39 டிரில்லியன் டாலர், மக்கள்தொகை 12.3 கோடி

9. சவுதி அரேபியா (Saudi Arabia) – GDP 1.14 டிரில்லியன் டாலர். மக்கள்தொகை 3.39 கோடி

10. இஸ்ரேல் (Israel) – GDP 550.91 பில்லியன் டாலர், மக்கள்தொகை 93.8 லட்சம்

இந்தியா

இந்தப் பட்டியலில் ரஷ்யாவின் GDP-யானது, UK, ஜெர்மனி, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளை விட குறைவாக இருந்தாலும் ராணுவ பலம், தொழில்நுட்ப முன்னேற்றம், மக்கள்தொகை உள்ளிட்ட காரணங்களால் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்தியா GDP 3.55 டிரில்லியன் டாலர் மற்றும் 143 கோடி மக்கள்தொகையுடன் 12-வது இடத்தில் இருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...