3
July, 2025

A News 365Times Venture

3
Thursday
July, 2025

A News 365Times Venture

ஈஷா:`மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறதா?’ – அறிக்கை கேட்கும் ஹைகோர்ட்

Date:

ஈஷா யோகா மையம் நடத்தவுள்ள மகாசிவராத்திரி நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து கோவையை சேர்ந்த சிவஞானன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி நாளில், ஈஷா யோகா மையம் சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நாளில், ஒரே நேரத்தில் லட்ச கணக்கான மக்கள் ஈஷா யோகா மையம் கூடுகின்றனர்.

ஈஷா யோகா மையம் நடத்தும் சிவராத்திரி நிகழ்ச்சியால் வெள்ளியங்கிரி வனச்சூழல் மிகுந்த பாதிக்குள்ளவாதாக தெரிவித்துள்ளார்.

ஈஷா

கடந்த காலங்களில் ஈஷா யோகா மையம் நடத்திய சிவராத்திரி நிகழ்ச்சியில் 7 லட்சம் பேர் ஒரே நேரத்தில் கூடியதால் ஏற்பட்ட கழிவு நீர் வனப்பகுதிகளை மட்டுமல்லாமல் அருகில் உள்ள விவசாய நிலங்களையும் மாசுப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

அதே போல், அரசு நிர்ணயித்துள்ள ஒலி அளவான 45 டெசிபல் ஒலி அளவை விட அதிமான அளவிலும், நிகழ்ச்சி வனப்பகுதியில் நடத்தப்படு விதிகள் மீறிய செயல் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஈஷாவில் முறையான கழிவு நீர் சுத்திகரிப்பு வசதிகள் ஏற்படுத்த உத்தரவிட கோரியும், விதிகளை மீறி வனசூழலை பாதிக்கும் வகையில் ஒலி, ஒளி மாசு ஏற்படுத்தும் ஈஷா யோகா மைய சிவராத்திரி நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க கூடாது என உத்தரவிடக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்படும் சிவராத்திரி விழாவின் போது எந்த சட்ட விதிகளும் பின்பற்றப்படுவதில்லை என்றும், பசுமைத் தீர்ப்பாய உத்தரவுகள் மீறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் யோகேஸ்வரன் வாதிட்டார்.

ஈஷா அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் , தன் நிலத்தை 100 கோடி ரூபாய்க்கு வாங்க மறுத்ததால், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக மனுதாரர், ஈஷாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், கடந்த ஆண்டும் இதே போல கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் தெரிவித்தார். மேலும், சிவராத்திரி விழாவின் போது எந்த விதிகளையும் மீறுவதில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், விதிமீறல்கள் இருந்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். சிவராத்திரி விழா நிகழ்ச்சிகளின் போது விதிகள் முறையாக, கண்டிப்புடன் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சிவராத்திரி விழாவின் போது விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து பிப்ரவரி 24ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும் படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...