12
March, 2025

A News 365Times Venture

12
Wednesday
March, 2025

A News 365Times Venture

ஈரோடு கிழக்கு: `பெரியார் பெயரைத் தவிர்த்த சீமான்; சைலன்ட் திமுக’- முதல் நாள் பிரசாரமும் கள நிலவரமும்

Date:

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் திமுக, நாம் தமிழர் கட்சி என இருமுனைப் போட்டியாக மாறியுள்ளது. கடந்த சில நாள்களாக பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வரும் கருத்துகள், தமிழக அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில், பெரியாரின் சொந்த ஊரான ஈரோட்டில் நடைபெறும் இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி களமிறக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக சீமான் வெள்ளிக்கிழமை தனது பிரசாரத்தை தொடங்கினார்.

முன்னதாக சென்னையில் இருந்து புறப்படும்போதும், கோவை விமான நிலையத்தில் வைத்தும் பெரியார் குறித்து மிகவும் காட்டமாக செய்தியாளர்களிடம் பேசினார். குறிப்பாக தனியார் தொலைக்காட்சியின் பெண் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தபோதும் பெரியார் குறித்தும், பிரபாகரனின் அண்ணன் மகன் தொடர்பாக பேசிய பேச்சுகள் கடும் சர்ச்சைக்குள்ளாகின.

இந்நிலையில், தனது முதல் நாள் பிரசாரத்தில் பெரியார் குறித்து மீண்டும் அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல் ஈரோட்டில் உள்ள தனியார் லார்ட்ஜில் தங்கிய சீமான், அன்றைய தினம் மாலை 4 மணிக்கு தனது பிரசாரத்தை தொடங்குவார் என நாம் தமிழர் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பரப்புரை

முன்னதாக அவர் சென்னை மற்றும் கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தியதால், தனது கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளிடம் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்குப் பின், 6 மணி அளவில்தான் சீமான் தனது பிரசாரத்தை தொடங்கினார். இதைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதியில் உள்ள கிருஷ்ணா திரையரங்கு மற்றும் கருங்கல்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் சீமான் நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அவருக்கு முன்னதாக பேசிய நாம் தமிழர் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பெரியார் குறித்து பேசியபோதும், பெரியாரா அல்லது பிரபாகரனா என்று பேசி வந்த சீமான் ஒரு இடத்தில்கூட பெரியார் பெயரைக் கூட தெரிவிக்காமல் திமுக-வை மட்டும் விமர்சித்து பேசிவிட்டுச் சென்றார்.

`பெரியார் குறித்து ஏன் பேசவில்லை?’

சீமான் பெரியாரை தவிர்த்தது குறித்து நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “ஈரோட்டுக்கு வரும்போது சென்னையிலும், கோவையிலும் அண்ணன் அளித்த பேட்டி எதிர்மறையான விமர்சனங்கள் வரத் தொடங்கியது. குறிப்பாக தனியார் தொலைக்காட்சியின் பெண் நிருபருக்கு அளித்தபேட்டியின்போது, பெரியார் கூறியதாக பேசிய பேச்சுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதனால், ஈரோட்டில் வைத்து மீண்டும் பெரியார் குறித்த கருத்துகளை கூறினால், அது வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திவிட வாய்ப்புள்ளதால் பெரியார் குறித்து அண்ணன் பேசவில்லை. இதை பயம் என்று கூற முடியாது.

அதுமட்டுமில்லாமல், திமுக தரப்பிலும் இருந்தும் பெரியாரிய அமைப்புகள் தரப்பில் இருந்தும் அண்ணனை பிரசாரம் செய்யவிடாமல் எதிர்ப்புகள் இருக்கும் என எதிர்பார்த்தோம். அப்படி இருந்தால் பெரியார் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், அதுவும் நடக்கவில்லை என்பதால், இந்தத் தொகுதியில் உள்ள பிரச்னை, திமுக ஆட்சியின் அவலங்களை மட்டும் அண்ணன் பேசிவிட்டுச் சென்றார்” என்றனர்.

அமைச்சர் முத்துசாமி

உத்தரவிட்ட தலைமை அமைதியான நிர்வாகிகள்..!

சீமான் ஈரோட்டுக்கு வந்தால் பிரசாரம் செய்ய விடமாட்டோம் என திமுக, பெரியாரிய மற்றும் அம்பேத்கரிய அமைப்புகள் வெளிப்படையாகவே பேசி வந்தன. குறிப்பாக சீமான் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டுமென தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் பெரியாரிய அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது. சீமான் ஈரோட்டுக்கு வந்தால் வலுவாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என ஆளுங்கட்சியினரும், திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் போன்ற பெரியாரிய அமைப்புகள் திட்டமிட்டிருந்தன.

எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டால், நாமாக சீமானுக்கு விளம்பரம் தேடிக் கொடுத்ததுபோல் ஆகிவிடும் என்பதால் அதை தவிர்க்குமாறு திமுக தலைமை மாவட்ட அமைச்சரான முத்துசாமி கண்டிப்பாக கூறிவிட்டதாக தகவல். சீமான் வருகையின்போது, கறுப்புக் கொடியாவது காட்டிவிடலாம் என திமுக-வின் தோழமைக் கட்சியைச் சேர்ந்த 7 பேர், சீமான் தங்கியிருந்த விடுதி அருகே சென்றுள்ளனர். இதைக் கவனித்த போலீஸார் அவர்களை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தி உள்ளனர். இதை அறிந்த அமைச்சர் முத்துசாமி அவர்களை அழைத்து கடுமையாக திட்டியுள்ளார்.

அண்ணா அறிவாலயம்

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “சீமானின் திட்டமே நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அதை வைத்து பிரசாரம் செய்து வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்பதுதான். நாங்களும் தொடக்கத்தில் சீமான் பிரசாரம் செய்யும் இடங்களில் அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், அமைச்சர் முத்துசாமி அதை வேண்டாம் என தெரிவித்துவிட்டார். நாங்கள் கூட சீமானின் முதல்நாள் பிரசாரத்தை எதிர்பார்த்துதான் காத்திருந்தோம். ஆனால், பெரியாரைப் பற்றி ஈரோட்டில் பேசினால் வாக்கு விழாது என்பது சீமானுக்கு நன்றாகவே புரியும். அதனால்தான் பயந்து பெரியார் பற்றி பேசுவதை தவிர்த்துள்ளார்” என்றனர்.

சீமானின் பேச்சு அதற்கு எதிர்வினை என அடுத்ததடுத்த நாள்கள் ஈரோடு கிழக்குத் தொகுதி தமிழக அரசியலை பரபரப்பாக வைத்திருக்கத்தான் போகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மல்ஹர் சர்டிஃபிகேட்: இந்துக்கள் மட்டும் நடத்தும் மட்டன் கடை – திறந்துவைத்த மகாராஷ்டிரா அமைச்சர்

மட்டன் கடைகளில் விலங்குகளை வெட்டும்போது முஸ்லிம்கள் ஹலால் முறையைப் பின்பற்றுவது வழக்கமாக...

`தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா… உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்!' – ஸ்டாலின் காட்டம்

மத்திய அரசு, தமிழ்நாட்டில் அமலுக்குக் கொண்டுவரத் தீவிரம் காட்டி வரும் 'தேசியக்...