13
March, 2026

A News 365Times Venture

13
Friday
March, 2026

A News 365Times Venture

ஈரான் தாக்குகிறதுதான்; ஆனாலும், மோதாமல் 'சைலன்ட்டாக' இருக்கும் வளைகுடா நாடுகள் – என்ன காரணம்?

Date:

ஈரான் மீது போர் தொடுத்தது என்னவோ அமெரிக்காவும், இஸ்ரேலும் தான்.

ஆனால், ஈரான் வளைகுடா நாடுகளையும் சேர்த்துக் குறி வைக்கின்றது.

‘அமெரிக்காவை எங்களால் நேரடியாகத் தாக்க முடியாது. அதனால், வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க தளங்களைத் தாக்குகிறோம்’ என்று தான் ஈரான் கூறுகிறது.

ஆனால், ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள உள்கட்டமைப்புகளையும் தாக்கியுள்ளது.

இந்த இடத்தில், பிறகு ஏன் வளைகுடா நாடுகள் ஈரானைத் தாக்கவில்லை என்கிற கேள்வி எழுகிறது. அதற்கான பதில் இதோ…

ஈரான் போர்

> ஈரான் தங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது என்று வளைகுடா நாடுகளும் தாக்குதலைத் தொடங்கினால், அந்தப் பிராந்தியத்தில் நிலையற்ற தன்மை உருவாகும்.

இப்போதே ஈரான் போர் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளும் இந்தப் போரில் இறங்கினால் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை நீங்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

மேலும், வளைகுடா நாடுகளின் நிலை இப்போது இருக்கும் தாக்குதல் நிலைமையை விட இன்னமும் மோசமாகும்.

முக்கியமாக, இதுவரை ஈரான் வளைகுடா நாட்டில் உள்ள மக்கள் பகுதிகளில் கைவைக்கவில்லை.

வளைகுடா நாடுகள் தாக்குதலைத் தொடங்கினால், அதன் மக்கள் பகுதிகளும் பாதிப்பிற்கு உள்ளாகும். இது அந்த நாடுகளை மேலும் நிலையற்ற தன்மைக்குள் தள்ளும்.

> வளைகுடா நாடுகள் மீது உலக அளவில் நல்ல மதிப்பு உண்டு. எரிசக்தித் துறை முதல் விமானத் துறை வரை அங்கே இருக்கும் அனைத்துமே நல்ல பெயர் பெற்றவை… முக்கியமானவை.

அப்படி இருக்கையில், அந்த நாடுகளும் தாக்குதலில் இறங்கினால், அவற்றின் பெயர் கெடும். மேலும், அவற்றின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு பெரிய அடி விழும்.

> அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் மீது போர் தொடுப்பதற்கு முன்பு, எந்த வளைகுடா நாடுகளிடமும் கலந்தாலோசிக்கவில்லை. இதுவே அந்த நாடுகளுக்கு சற்று அதிருப்தி தான்.

இதனாலே, பல நாடுகள் அமெரிக்கா அவர்கள் நாட்டில் இருந்து தாக்குதல் நடத்த அனுமதி தரவில்லை.

ஈரான் போர்
ஈரான் போர்

> வளைகுடா நாடுகள் மெல்ல மெல்ல மத அடையாளத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருந்தாலும், அவை முஸ்லிம் நாடுகள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தங்களைப் போல ஒரு முஸ்லிம் நாட்டை பிற நாடுகள் தாக்கும் போது, தாங்களும் தாக்கினால், அது தங்களது பிராந்தியத்தின் வலிமையைச் சற்று குறைக்கும் என்று நினைக்கிறார்கள்.

> வளைகுடா நாடுகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தினாலோ… அங்கே ஆட்சி மாற்றம் நடந்தாலோ அங்கு இருந்து வரும் அகதிகள் வளைகுடா நாடுகளில் தான் குடிபுகுவார்கள். இது அந்த நாடுகளுக்கே பின்னடைவாக அமையும்.

மேலும், தீவிரவாத அமைப்புகள் வளைகுடா நாடுகளிலும் உள்புகும்.

ஆக, வளைகுடா நாடுகள் இந்தப் போரில் இறங்கினால், அவர்களுக்கே மிகப்பெரிய மைனஸ். அதனால் தான், அவர்கள் தள்ளி நின்றே வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'கூட்டணிக்கு போகலாமா?'- அவசர மா.செக்கள் மீட்டிங்கில் ஆனந்த் கேட்ட கேள்வி; ட்விஸ்ட் கொடுக்கும் விஜய்?

தவெக சார்பில் திடீரென அவசர அவசரமாக கூட்டப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்...

ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து மும்பை வந்தடைந்த கச்சா எண்ணெய் கப்பல் – கைகொடுத்த `Dark Mode' டெக்னிக்!

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக ஹார்முஸ் ஜலசந்தியில் பல பில்லியன் பேரல்கள் கச்சா...

திருத்தணி: திமுக-வில் கோஷ்டி பூசல்; சசிகலா ஆதரவாளரால் நெருக்கடியில் அதிமுக -கட்சிகளில் நிலவரம் என்ன?

திருவள்ளூர் மாவட்டத்தில் முருகனின் அறுபடை வீடு அமைந்துள்ள திருத்தணி தொகுதியில் தெலுங்கு...

“கூட்டம் சேர்ப்பவரெல்லாம் தலைவன் ஆகிவிட முடியாது!’’ – ஆதவ் கருத்துக்கு ரஜினி ரசிகர் மன்றம் பதிலடி

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேற்று...