5
March, 2026

A News 365Times Venture

5
Thursday
March, 2026

A News 365Times Venture

ஈரான் உச்ச தலைவர் கமேனி மறைவு: 5 நாள்கள் கழித்து இரங்கல் தெரிவித்த இந்தியா!

Date:

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகின்றன. ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் எனப் பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

கமேனி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த இந்தியா!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. சில நாடுகள் அவரின் மறைவிற்கு கண்டனம் தெரிவித்து இரங்கல் தெரிவித்திருந்தன.

ஆனால் இந்தியா அரசு இந்த விவகாரத்தில் மெளனம் காத்துவந்தது. இந்நிலையில் இன்று (மார்ச்.5) கிட்டத்தட்ட 5 நாள்கள் கழித்து கமேனியின் மறைவிற்கு இந்தியா இரங்கல் தெரிவித்திருக்கிறது.

டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் அலி கமேனிக்கு இரங்கல் தெரிவிக்கும் புத்தகத்தில் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்தியா சார்பில் கையெழுத்திட்டு அந்நாட்டு தூதரைச் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`துணை முதல்வர் பதவி கேட்டோமா?' – பிரேமலதா சொன்ன பதில்!

தமிழகத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ,...

RN Ravi: அதிரடியாக மாற்றப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி! – பின்னணி காரணம் என்ன?

தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டு உள்ளார்....

மேற்கு ஆசியப் போர் பதற்றம்: பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி!

மேற்கு ஆசியாவில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர...

ஆனந்த் போஸ் ராஜினாமா: தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றமா?!

மேற்கு வங்கம், தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களில்...