28
March, 2026

A News 365Times Venture

28
Saturday
March, 2026

A News 365Times Venture

“இனி யார் அந்த சார்? என்று கேட்டால், அது நீதிமன்ற அவமதிப்பு'' -அரசு தரப்பு வழக்கறிஞர் சொல்வது என்ன?

Date:

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என மே 28 ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.

தீர்ப்பின் தண்டனை விவரம் ஜுன் 2 ஆம் தேதி வெளியாகும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.

ஞானசேகரன்

இந்நிலையில் தண்டனை தீர்ப்பு குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். “இவர் மீது இருக்கும் குற்றச்சாட்டுக்கு அதிகபட்ச தண்டனை இதுதான்.

ஞானசேகரன் தண்டனையில் எந்த ஒரு சலுகையும் தரப்படாது. இனி யார் அந்த சார்? என்று கேள்வி எழுப்பினால் அது நீதிமன்ற அவமதிப்பாகும். ஞானசேகரனின் பின்புலத்தில் யாரும் இல்லை.

சம்பவம் நடந்த போது, அவரது ஃபோன் ஃபிளைட் மோடில் இருந்ததை செல்போன் சேவை நிறுவனமே உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையிலும் அது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஞானசேகரன் செல்போனுக்கு செல்போனுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்று பாதிக்கப்பட்ட மாணவியும் உறுதி செய்திருந்தார். அது ஆதாரப்பூர்வமாகவும் அது நிரூபிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் மேரி ஜெயந்தி
வழக்கறிஞர் மேரி ஜெயந்தி

பாதிக்கப்பட்ட மாணவியை மிரட்டுவதற்காகவே, அவர் தானும் அந்த பல்கலை, ஊழியர் என்று, ஞானசேகரன் யாருடனோ போனில் பேசியது போல நடித்திருக்கிறார்.

இதன் மூலம், ஞானசேகரனைத் தவிர, வேறு யாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கோவைக்கு மாறிய செந்தில் பாலாஜி; அமைச்சருக்கு இடம் இல்லை! – வெளியானது திமுக வேட்பாளர் பட்டியல்!

தமிழக சட்டபேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது....

`காங்கிரஸ் தொகுதியை கைப்பற்றி கம்யூனிஸ்ட்; தேமுதிக-வை கூல் செய்த முதல்வர்!' – பைனல் ஆன பட்டியல்!

காங்கிரஸ் கைவசம் உள்ள ஒரு தொகுதியை கம்யூனிஸ்ட் கைப்பற்றியுள்ளது. தே.மு.தி.கவுடனும் தொகுதியை...

"தனது கலைத்திறமையால் மகிழ்வித்து வந்த சுந்தர்.சி இனி மக்களுக்கு சேவை ஆற்றுவார்"- வாழ்த்திய குஷ்பு

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி...

நாமக்கல்: `தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும்'- தங்கமணிக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி

நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி...