5
April, 2026

A News 365Times Venture

5
Sunday
April, 2026

A News 365Times Venture

இனி இந்தியாவில் தங்க 'நகைகளை' இறக்குமதி செய்ய கடும் கட்டுப்பாடு! – விவரம் என்ன?

Date:

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல், தங்க நகைகளின் இறக்குமதியில் கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ளது மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம்.

2010-ம் ஆண்டில் இருந்து இந்தியா 10 ASEAN நாடுகளுடன் பொருள்களை இறக்குமதி செய்வதில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி பலர் பிற பொருள்களின் பெயரில் தங்க நகைகளை இறக்குமதி செய்வது, சரியாகச் சுங்க வரி செலுத்தாது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

தங்க நகை

இதனால், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தங்க நகைகளுக்கும், அதை தயாரிப்பவர்களுக்கும் பிரச்னை ஏற்படுகிறது.

இதைத் தடுக்க, இந்தியா தற்போது தங்கம், வெள்ளி, பிளாட்டின நகைகள் இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

அதன் படி, இனி தங்கம், வெள்ளி, பிளாட்டினம் நகைகளை இறக்குமதி செய்வதில், தகுந்த அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

யார் தங்க நகைகளை இறக்குமதி செய்கிறார்கள், எவ்வளவு செய்கிறார்கள் என்பதை பொறுத்து இந்த அனுமதி அளிக்கப்படும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related