13
February, 2026

A News 365Times Venture

13
Friday
February, 2026

A News 365Times Venture

இந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் 25% வரி – இந்திய‌ – அமெரிக்க ஒப்பந்தம் முக்கிய 7 அம்சங்கள்!

Date:

கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் (பிப்ரவரி 2), இந்திய பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் முடிவாகி உள்ளதை அறிவித்தனர்.

இந்த ஒப்பந்தம் குறித்த முழு தகவல்களும் நேற்று வெளியாகின.

அதன்படி, இந்த ஒப்பந்தம் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய 7 அம்சங்கள்.

ஏற்றுமதி – இறக்குமதி

> இந்தியா மீதான வரியை 25 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைத்திருக்கிறது அமெரிக்கா.

ஆனால், இந்தியா எத்தனை சதவிகித வரியைக் குறைக்க உள்ளது என்பது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை.

இந்தியா அமெரிக்கப் பொருள்கள் மீதான வரியைக்‌ குறைக்கும் அல்லது ரத்து செய்யும் என்று தான் கூறப்பட்டுள்ளது.

> ஆசிய நாடுகளிலேயே ஜப்பானுக்கு அடுத்து இந்தியாவிற்கு‌த் தான் மிகக்‌ குறைந்த வரி.

இது நமது போட்டி நாடுகளான சீனா, வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளை விட மிகப்பெரிய ப்ளஸ்.

> இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குகிறதா என்பதை அமெரிக்கா தொடர்ந்து கண்காணிக்கும்.

ஒருவேளை, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் மீண்டும் 25 சதவிகித வரி விதிக்கப்படும்.

> எரிசக்தி, விமான பாகங்கள், உலோகங்கள்… என இந்தியா அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து 500 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இறக்குமதியைச் செய்யும்.

> இரு நாடுகளும் பரஸ்பர தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவிக்கொள்ளும்.

> இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின்‌ பிரதான உணவுகளான அரிசி, கோதுமை, மக்காச்சோளம் ஆகிய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்காவிற்கு எந்தச்‌ சலுகையும் இல்லை.

> இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ரத்தினக் கற்கள், மருந்துகள் போன்றவைகளுக்கு வரிவிலக்கு.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`ஸ்டாலினுக்குத் தோல்வி பயம்; வாக்குக்காக உரிமைத்தொகையை முன்பணமாகக் கொடுக்கிறார்’ – எடப்பாடி பழனிசாமி

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள்...

ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக் vs தேர்தலுக்கான லஞ்சம் பத்திரிகையாளர்களின் பார்வையில் மகளிருக்கு ரூ.5000

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம்...

5,000 ரூபாய் அறிவிப்பு: `பென்' கொடுத்த அழுத்தம்; சீக்ரெட் வியூகம் அமைத்த அதிகாரி – செயலாக்கிய டீம்!

'இந்த பிப்ரவரி மாதம் மட்டுமல்லாமல் அடுத்த 2 மாதம்… அதாவது மார்ச்,...