31
August, 2025

A News 365Times Venture

31
Sunday
August, 2025

A News 365Times Venture

`ஆளுநர் தேநீர் விருந்தை, தவெக தலைவர் விஜய் புறக்க ணிப்பது நல்லது' – துரை வைகோ எம்.பி!

Date:

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் தனியார் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.‌ இந்த விழாவில் ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியை அடுத்து துரை வைகோ எம்.பி. செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா விவகாரத்தில் தி.மு.க. எம்.பி., ஆ.ராசா உள்பட ‘இண்டியா கூட்டணி’ கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை.

பேட்டி

அதேபோல மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் விவகாரத்தில் பா.ஜ.க உள்ளிட்ட மதவாத சக்திகள் இந்துக்கள் இஸ்லாமியர்களிடையே மதக்கலவரத்தை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பா.ஜ.க.வின் பத்தாண்டு ஆட்சி கால தோல்வியை மூடி மறைப்பதற்காக வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை கையில் எடுத்துள்ளது. தமிழக மக்களும், இந்திய மக்களும் பொதுவாக சாதி- மதத்தை வைத்து அரசியல் நடத்தி வரும் கட்சிகளை புறந்தள்ளி வீட்டுக்கு அனுப்ப வேண்டும். குடியரசு தினவிழா ஆளுநரின் தேநீர் விருந்து நிகழ்ச்சியை இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் புறக்கணித்துள்ளது. ஆளுநர் தேநீர் விருந்திற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செல்வதும், செல்லாமல் இருப்பது அவரின் கட்சி சார்ந்த முடிவு. இதில் எதுவும் சொல்ல முடியாது.

துரை வைகோ எம்.பி

ஆனால் தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் எதிராக செயல்படும் ஆளுநரின் தேநீர் விருந்தை விஜய் புறக்கணிப்பதுதான் நல்லது. ஆளுநரின் தேநீர் விருந்தில் விஜய் கலந்து கொண்டால் அவர் கட்சிக்குத்தான் கேடு. விஜய், புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளார், அவர் நல்லா இருக்கட்டும்” எனக் கூறினார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...