11
March, 2026

A News 365Times Venture

11
Wednesday
March, 2026

A News 365Times Venture

அமெரிக்காவிற்கு பெரும் சிக்கலாகும் ஈரான் 'டிரோன்கள்' – உக்ரைனுக்கு 'நோ' சொன்ன விளைவு இது!

Date:

அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டுமே வளர்ச்சி, பொருளாதாரம், தொழில்நுட்பம் என அனைத்திலும் மிகப்பெரிய நாடுகள். இந்த விஷயங்களில் ஈரானை ஒப்பிட்டால், அதற்குக் குறைந்த மதிப்பெண்களே கிடைக்கும்.

ஆனாலும், 12 நாள்களாகப் போர் தொடர்ந்தும், ஈரானை இன்னமும் வழிக்குக் கொண்டு வரமுடியவில்லை.

இந்தப் போரில் ‘டிரோன்கள்’ ஈரானுக்கு மிகப்பெரிய பக்க பலமாக இருந்து வருகிறது.

போரின் தொடக்கத்தில் டிரோன்களை அமெரிக்கா பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், இப்போது அது தான் அமெரிக்காவின் பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது.

ஈரானிய ஷாகேத் டிரோன்

விலை…

இப்படி அமெரிக்காவிற்குத் தலைவலியாக ஈரான் பயன்படுத்தும் டிரோன் வகையின் பெயர், ‘ஈரானிய ஷாகேத் டிரோன்’.

ஒவ்வொரு ஷாகேத் டிரோனின் விலையும் 20,000 – 50,000 டாலர்கள். ஆனால், அதை தகர்க்கும் அமெரிக்காவின் இடைமறிப்பான்கள் (Interceptors) விலையோ மில்லியன் கணக்கில்.

மேலும், டிரோன்களை எளிதாகக் குறுகிய காலத்தில் ஈரான் தயாரித்துவிடலாம். ஆனால், இடைமறிப்பான்களைத் தயாரிக்க பல மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை ஆகும்.

இதனால், ஷாகேத் டிரோன்களைத் தடுக்க ஒரு சிஸ்டத்தை அமைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

கண்டே பிடிக்க முடியவில்லை

டிரோன் விஷயத்தில் பணம் ஒரு பிரச்னை என்றால், அதை அமெரிக்கா இடைமறிப்பான்கள் கண்டுபிடிப்பதே பெரும் சிரமமாக இருக்கிறது.

ஆம்… அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பினால் அனைத்து ஷாகேத் டிரோன்களையும் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

இந்த டிரோன்கள் மெதுவாகவும், குறைந்த உயரத்திலும் பறக்கக்கூடியது. இதனால், அமெரிக்க ரேடார்களால் இந்த டிரோன்களைக் கண்டுபிடிக்க முடிவதில்லை.

அதனால், இவை பிற நாடுகளுக்குள் புகுந்து எளிதாகத் தாக்குதல் நடத்துகின்றன. இது குறித்து அந்த நாடுகள் அமெரிக்காவிடம் புகாரளிப்பது அதற்குப் பெரும் பிரச்னையாக இருக்கிறது.

ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி
ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி

அமெரிக்கா செய்த ‘தவறு’

இந்த டிரோன் பிரச்னைகளை அமெரிக்கா எளிதாக தவிர்த்திருந்திருக்கலாம். ஆனால், அமெரிக்கா செய்த ஒரு ‘தவறு’ இப்போது பெரும் பிரச்னையாக இருக்கிறது.

2022-ம் ஆண்டில் இருந்து உக்ரைன் மீது ரஷ்யா பொழிந்து வருவது இந்த வகையான டிரோன் தான். அதனால், அதை தடுக்கத் தேவையான அமைப்பை வைத்திருக்கிறது உக்ரைன்.

இதை இன்னமும் வலுப்படுத்த அமெரிக்காவிடம் நிதியுதவி கேட்டது உக்ரைன். பதிலுக்கு உக்ரைன் அமெரிக்காவிற்கு அந்த அமைப்பைத் தருவதாகத் தெரிவித்திருந்தது.

ஆனால், அதை அமெரிக்கா மறுத்துவிட்டது. அது தான் இப்போது அமெரிக்காவின் பூதாகரச் சிக்கலாக மாறி நிற்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`எங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம்..!' – அன்புமணி ராமதாஸ்

தங்கள் குடும்பம் இப்படி ஆனதற்கு திமுக கைக்கூலிகளும் ஒரு காரணம் என்று...

பாஜக கூட்டணியில் தவெக? "EPS-ஸிடம்தான் கேட்க வேண்டும்; ஏனென்றால்" – பியூஸ் கோயலின் பதில் என்ன?

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக...

எம்ஜிஆர், ஜெயலலிதா சாதித்தது பழனிசாமியால் சாத்தியாமா? | ‘வாவ்’ வியூகம் 09

எம்ஜிஆர், ஜெ. சாதித்தது பழனிசாமியால் சாத்தியாமா?‘வாவ்’ வியூகம் 09திமுக பெருந்தலைகள் ஆரம்ப...

திருச்சி: "இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை" – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

திருச்சியில் இன்று நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக...