17
March, 2026

A News 365Times Venture

17
Tuesday
March, 2026

A News 365Times Venture

'அன்றே செத்து விட்டேன்' – அன்புமணியை நோக்கி ராமதாஸ் பாய்ச்சிய அந்த '10' குற்றச்சாட்டுகள் என்னென்ன?

Date:

இன்று காலை விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவரும், அவரின் மகனுமான அன்புமணி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

அன்புமணியை நோக்கி ராமதாஸ் பாய்ச்சிய முக்கிய குற்றச்சாட்டுகள் இங்கே…

* அன்புமணிக்கு தலைமைப் பண்பு கொஞ்சம் கூட இல்லை.

* பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணியின் செயல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

* புதுச்சேரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் மேடை நாகரிகம் இல்லாமல் செயல்பட்டது யார்? ஒரே நொடியில் கட்சியை உடைத்தது யார்?

* தான் செய்த செயலை மறைத்து, கட்சியினரிடமும் மக்களிடமும் அனுதாபம் பெற அன்புமணி முயற்சித்து வருகிறார்.

இராமதாஸ்

* 35 வயதிலேயே அன்புமணியை எம்.பி ஆக்கியதுதான் நான் செய்த பெரிய தவறு.

* தாயை பாட்டிலால் அடிக்க முயன்றவர். குருவை அவமதித்தவர்.

* மாவட்ட செயலாளர்களுக்கு அன்புமணியே ஃபோன் செய்து, ‘கூட்டத்துக்கு சென்றால், உங்களை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கிவிடுவார்’ என சொல்லியிருக்கிறார் அதனால் 108 பேரில், 8 பேர்தான் கூட்டத்துக்கு வந்தார்கள்; அன்றே நான் செத்துவிட்டேன்; கற்பனை கூட செய்ய முடியாத இப்படியான பொய்களை, கூசாமல் சொல்வார் அன்புமணி.

* மாவீரன் காடுவெட்டி குருவை கீழ்தரமாக நடத்தியது ஏற்கத்தக்கது அல்ல.

* தமிழ்க்குமரனை இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றேன். ஆனால் அதை அவர் செய்யவில்லை.

* சமூக ஊடகப் பேரவைக் கூட்டத்துக்கு செல்பவர்களை அடிக்க 6 பேரை நியமித்திருக்கிறார் என பொய் பரப்பினார். நான் அப்படி செய்வேனா?

* எனக்கு பொய்யே வராது. அன்புமணிக்கு கூசாமல் பொய் வருகிறது.

அன்புமணி
அன்புமணி

* அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் எனவும், பாஜகவுடன் கூட்டணி வேண்டும் என அன்புமணியும் அவரது மனைவியும் சௌமியாவும் என்னிடம் அழுதனர். கால்களை பிடித்தனர். பாஜக கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் எனக்கு நீங்கள் தான் கொள்ளி வைக்க வேண்டும் என அன்புமணி மிரட்டினார். நீண்ட நேரம் அழுதததால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'மனிதநேயமற்ற குற்றம்' – ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்; 400 பேர் உயிரிழப்பு

கடந்த சில மாதங்களாக, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் முட்டி மோதிக்கொண்டுதான் இருந்தன....

ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியாவுக்கு வர இரண்டு கப்பல்களை ஈரான் அனுமதித்தது எப்படி? – ஜெய்சங்கர் பதில்

ஈரான் போரின் மையமாக 'ஹார்முஸ் ஜலசந்தி'யும் இருந்து வருகிறது. போர் தொடங்கியதில்...

ஹார்முஸ் ஜலசந்திக்கு போர் கப்பலை அனுப்புங்கள் – சீனா, ஜப்பானை அழைக்கும் ட்ரம்ப் – ஏன்? எதற்கு?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எவ்வளவு முயற்சித்தும் ஹார்முஸ் ஜலசந்தியில் தனது பிடியை...