17
March, 2025

A News 365Times Venture

17
Monday
March, 2025

A News 365Times Venture

அதிமுக ஆலோசனை கூட்டம்; மீண்டும் புறக்கணித்த செங்கோட்டையன் – சலசலக்கும் அதிமுக முகாம்!

Date:

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தை இன்றும் செங்கோட்டையன் புறகணித்திருக்கிறார்.

கடந்த மாதம், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக விவசாய அமைப்புகள் சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. விழா அழைப்பிதழில், எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம் பெறாததால் அதில் பங்கேற்கவில்லை என அதற்கு அவர் காரணம் கூறியிருந்தார்.

செங்கோட்டையன்

அதேபோல கடந்த 14 ஆம் தேதி, தமிழக பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. நேற்று முன்தினம் வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக பேரவைத் தலைவர் அப்பாவுவை அவர் தனியே சந்தித்தார்.

இந்நிலையில், இன்று சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானம் குறித்து அதிமுக எம்.எல்.ஏ களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்தக் கூட்டத்திலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்திருக்கிறார்.

செங்கோட்டையன்

இது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று நம்பிக்கை இல்லா தீர்மனம் நடைபெற இருக்கும் நிலையில் செங்கோட்டையனின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ சட்டப்பேரவையில் செங்கோட்டயனிடம் பேசிக்கொண்டே இருந்தார். இதனால் அவர் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் பரபரக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மார்ச் மாத பௌர்ணமி; `முடிஞ்சிடுச்சு'ன்னார் தலைவர் – `திக் திக்' சம்பவத்தை நினைவுகூறும் மல்லை சத்யா

``ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி இரவை என்னால் மறக்கவே முடியவில்லை''...

“சரியாகப் படிக்கவில்லை..'' – வாளி தண்ணீரில் தலையை முக்கி 2 மகன்களைக் கொன்று தந்தை தற்கொலை..?

ஆந்திராவில் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபர் வனப்பள்ளி சந்திர...

`கனிவானவர்; ஆனால் கண்டிப்பானவர்..!’ – சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச விடுவதில்லை என்றும்,...

அண்ணாமலை, வானதி, தமிழிசை உள்ளிட்டோர் கைது – வீட்டுக் காவலில் பாஜக-வினர் | என்ன காரணம்?

தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் முடிவில், ரூ.1000...