19
March, 2026

A News 365Times Venture

19
Thursday
March, 2026

A News 365Times Venture

ஹார்முஸ் ஜலசந்தி: இந்தியாவுக்கு வர இரண்டு கப்பல்களை ஈரான் அனுமதித்தது எப்படி? – ஜெய்சங்கர் பதில்

Date:

ஈரான் போரின் மையமாக ‘ஹார்முஸ் ஜலசந்தி’யும் இருந்து வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து இந்த ஜலசந்தி வழியாக எந்தக் கப்பலையும் அனுமதிப்பதில்லை ஈரான்.

போரினால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக ஏறினாலும், இந்த ஒரு விஷயமும் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி வருகிறது.

இந்தச் சூழலில் இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதித்துள்ளது ஈரான்.

ஹார்முஸ் ஜலசந்தி

ஜெய்சங்கர் பேச்சு

இது குறித்து ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’-க்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளதாவது…

“ஈரானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். என்னுடைய பேச்சுவார்த்தைக்கு சில நல்ல முடிவுகளும் கிடைத்துள்ளன.

இன்னமும் பேச்சுவார்த்தை சென்றுகொண்டிருக்கின்றன. அந்தப் பேச்சுவார்த்தை நல்ல முடிவை எட்டினால், அது தொடரும்.

ஈரான் இந்திய கப்பல்களை அனுமதித்ததற்கு எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை.

இன்னும் நிறைய இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் இருக்கிறது. அதனால், பேச்சுவார்த்தை இன்னமும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றது”.

இந்தியா எல்.பி.ஜி சிக்கலால் கடுமையாக திண்டாடி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் கப்பல்களில் சில இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் எல்.பி.ஜியைக் கொண்டு வருகிறது.

ஆக, இந்தக் கப்பல்கள் இந்தியா வர அனுமதிக்கப்பட்டால், இந்தத் தட்டுப்பாடுகளை ஓரளவு நிச்சயம் குறைக்க முடியும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

”விஜய்யிடம் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை!” – நயினார் நாகேந்திரன்

தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச்...

'ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை; கமேனி தன் இறப்பிற்கு பயப்படவில்லை!' – ஜோ கென்ட் 'பரபர' தகவல்கள்

"ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் இஸ்ரேலின் அழுத்தத்தால் தொடங்கப்பட்டது... மனசாட்சிக்கு விரோதமாக...