21
February, 2026

A News 365Times Venture

21
Saturday
February, 2026

A News 365Times Venture

ஹாட்பாக்ஸில் சுடசுட மட்டன் பிரியாணி; பிரமாண்ட செட்! – திமுக வாக்குசாவடி கூட்டத்தில் எனென்ன ஸ்பெஷல்?

Date:

மதுரையில் திமுகவின் வாக்குசாவடி முகவர்களுக்கான தெற்கு மற்றும் மதுரை மண்டல பயிற்சி மாநாடு இன்று நடக்க இருக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

இதற்காக ஒத்தகடையில் 1 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட் செட் அமைக்கப்பட்டிருக்கிறது. கூட்ட அரங்கில் நுழைவதற்கு மூன்று வழிகள் அமைத்து தார் சாலை போடப்பட்டிருகிறது.

இதில் கலந்து கொள்ளும் முகவர்களுக்கு பெரிய பெரிய அண்டாக்களில் சுட சுடமட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி தயார் செய்யப்பட்டு வருகிறது.

மதுரை வாக்குசாவடி முகவர்கள் கூட்டம்

மொத்தம் 15 சமையலாளர்கள் டீம் உணவு தயாரிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கமாக பிரியாணிகள் பொட்டலங்களில் தான் கொடுப்பார்கள். இந்த முறை ஹாட்பாக்ஸ்களில் பிரியாணிகளை அடைத்து கொடுக்க இருக்கின்றனர்.

மதுரை திமுக வாக்குசாவடி முகவர்கள் கூட்டம்

இந்த ஹாட்பாக்ஸ்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன.

மதுரை திமுக வாக்குசாவடி முகவர்கள் கூட்டம்

மேலும் ஒவ்வொரு முகவருக்கும் ஒரு பை கொடுக்கப்பட இருக்கிறது. அதில் பிரியாணியுடன் ஹாட்பாக்ஸ் , சிக்கன் கிரேவி, தால்சா, இரண்டு வாட்டர் பாட்டில்கள், வாக்கு சாவடி முகவர்களுக்கான கையேடு, திமுக கட்சி துண்டு ஆகியவை வைக்கப்பட்டிருகிறது.

மதுரை திமுக வாக்குசாவடி முகவர்கள் கூட்டம்

கூட்டம் நடைபெறும் இடம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் தனி தனி கேபின்கள் அமைக்கப்பட்டு குடிநீர் டேங்குகள் வைக்கப்பட்டிருக்கிறது.

Loading…

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'டார்கெட் சவுத்' – ஆதவ்க்கு சென்னை; கொங்குக்கு செங்கோட்டையன்! – தேர்தல் பொறுப்பை ஒப்படைத்த விஜய்!

சட்டப்பேரவை தேர்தலுக்கான வேலைகள் பரபரக்க தொடங்கியிருக்கும் நிலையில், தவெக சார்பில் தேர்தல்...

ட்ரம்பின் கருத்து: `மீண்டும் ஒருமுறை சரணாகதிதான்" – பிரதமர் மோடியை சாடும் ராகுல் காந்தி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த வரிகளுக்கு எதிராக அமெரிக்க...

திருமணப் பதிவு: "பெற்றோருக்கு வாட்ஸ்அப்பில் தெரிவிக்கப்படும்" – விதிகளைக் கடுமையாக்கும் குஜராத்

குஜராத் மாநில அரசு, திருமணப் பதிவு முறைக்கெனப் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது....