14
March, 2025

A News 365Times Venture

14
Friday
March, 2025

A News 365Times Venture

விழுப்புரம்: “பெரியாரை யாராலும் வீழ்த்தவும் முடியாது; வெல்லவும் முடியாது..'' -எம்.பி கனிமொழி

Date:

விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி ஆலோசனை கூட்டம், கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி, “பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் தி.மு.க தலைமையிலான ஆட்சிதான் அமைய வேண்டும். இன்றைக்கு பெண்கள் பட்டம், பதவி ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறார்கள் என்றால் அதற்கு காரணம் தி.மு.க ஆட்சிதான். நீதிக்கட்சி ஆட்சியில்தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது அதேபோல பெண்கள் 50% சதவிகிதம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடலாம் என தமிழகத்தில் மட்டுமே சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பெரியார்

இன்னும் கூட பல்வேறு நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. எனவே பெண்கள் தி.மு.க அரசின் சாதனைகளான மகளிர் உரிமைத் தொகை, திருமண உதவித் திட்டம், கல்வி உதவித் தொகை ஆகியவற்றை வீடு வீடாக சென்று எடுத்துக் கூற வேண்டும். பெரியாரை யாராலும் வீழ்த்தவோ, வெல்லவோ முடியாது. தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களின் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர் தந்தை பெரியார். அதேபோல தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் திருக்குறள் தெரியும். அதனால் தமிழகத்துக்கு தேவையானது நீதி மட்டும்தான் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கழுகார் : `ஆலையைத் திறக்க வேறொரு ரூட் ’ டு `குழப்பத்தில் பெண் தெய்வப் பிரமுகர்’

அம்பலமாகும் கூட்டுச் சதி!மரக் கொள்ளைக்காக ஆப் ஆனதா சி.சி.டி.வி?‘ஜில்’ மாவட்ட நுழைவு...

`₹'-க்கு பதில் `ரூ' : “பிராந்திய பேரினவாதம்'' – திமுகவை தாக்கிய நிர்மலா சீதாராமன்!

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, தமிழகத்தில் இந்தி...

`தென் மாவட்டங்களில் சாதி ரீதியான கொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன’ – திருமாவளவன்

நெல்லை செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை...

Immigration and Foreigners Bill: குடியேறிகளுக்குப் புதிய மசோதா கொண்டு வந்த பாஜக அரசு | முழு விவரம்

Immigrants எனப்படும் குடியேறிகள் தொடர்பாக மத்திய அரசு புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில்...