30
July, 2026

A News 365Times Venture

30
Thursday
July, 2026

A News 365Times Venture

விருதுநகர்: அரசுப் பள்ளி சத்துணவு மையத்தில் திடீர் ஆய்வு; சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்..!

Date:

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆவுடையாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் விருதுநகர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது பள்ளியின் சத்துணவு மையத்தில் பயனாளிகள் எண்ணிக்கை 293 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், தினமும் 60 பயனாளிகளுக்கு மட்டுமே பள்ளியில் மதிய உணவு தயார் செய்யப்பட்டு வழங்கி வந்தது கண்டறியப்பட்டது.

சத்துணவு மையங்கள் (சித்தரிப்பு படம்)

மேலும் கடந்த இரண்டு மாதங்களாக உணவுப்பொருள்கள் சத்துணவு மையத்தில் இருப்பு பதிவேடு, ரொக்கப்பதிவேடு முறையாக பராமரிக்கப்படாமல் மதிய உணவு தரமற்றதாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், காய்கறி சரியான விகிதத்தில் உணவில் சேர்த்துக் கொள்ளப்படாமலும், சத்துணவு அறையின் உள்பகுதி சுகாதாரமற்ற நிலையிலும், சமையல் பாத்திரங்கள் சுத்தமற்ற நிலையிலும் இருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை தயார் செய்து அனுப்பினர். அதன்படி, ஆவுடையாபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் கவிதா என்பவரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தேனி: கோமா நிலையில் சிறுவன்; `அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சைதான் காரணம்' – உறவினர்கள் போராட்டம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுதா என்பவருடைய...

PoK போராட்ட செய்தி: 'நியூயார்க் டைம்ஸ்' இதழின் தலைப்புக்கு இந்தியா கடும் கண்டனம்!

PoK-வின் மிர்பூர் பகுதியில் காவல்துறை அத்துமீறல்களுக்கு எதிராகச் சிவில் உரிமைக் குழுக்கள்...

தாத்தா தமிழகத்தின் 'ஸ்பீக்கர்', பேத்தி சர்வதேச `பெஸ்ட்' ஸ்பீக்கர்! – கலக்கும் காந்தள்

தி ஹேக், நெதர்லாந்து நாட்டின் மூன்றாவது பெரிய நகரம். 'ரோம் சட்டம்'...

"யார் குரலையும் கேட்காமல் indifferent, inactive ஆக இந்த அரசு இருப்பது நல்லதல்ல" – ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா...