1
April, 2026

A News 365Times Venture

1
Wednesday
April, 2026

A News 365Times Venture

"விஜய்யுடன் பேசி NDA கூட்டணி ஆட்சி அமைக்கும்.!"- மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சொல்வதென்ன?

Date:

பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தவெக தலைவர் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரியில் நேற்று (மார்ச்.31) இந்திய குடியரசு கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

தவெக விஜய்

இதில் அக்கட்சியின் தலைவரும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே கலந்துகொண்டிருக்கிறார்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் அவர், ” புதுச்சேரி மற்றும் அசாமில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஆட்சி இருக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வராது.

தேர்தலுக்கு பிறகு அங்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடிகர் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதேபோல் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை வீழ்த்திவிட்டு ஆட்சி அமைக்கும்.

ராம்தாஸ் அத்வாலே
ராம்தாஸ் அத்வாலே

கேரளத்தில் இப்போது ஆளும் மார்க்சிஸ்ட் ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அங்கும் பாஜக ஆட்சி அமைக்கும். அதனால் தேர்தலுக்குப் பிறகு 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்.

நாட்டின் வலிமையான பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியில் இருக்கிறார். நாட்டின் வளர்ச்சிதான் அவரின் குறிக்கோள்” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

வருமான வரி, பங்குச்சந்தை: இன்று முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் என்னென்ன?

இன்று (ஏப்ரல் 1) முதல் பல்வேறு நிதி மாற்றங்கள் அமலுக்கு வர...

"பாஜக-வின் டப்பா இன்ஜின் முன் திராவிட மாடல் சூப்பர் இன்ஜின் ஒரு போதும் தலைகுனியாது!" – ஸ்டாலின்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று...

'அவரு போயி 2 வருசம் ஆச்சு சார்!' உள்துறை செயலாளருக்கு பதில் மணிப்பூர் கவர்னருக்கு கடிதம் எழுதிய தவெக

தவெக தலைவர் விஜய்யின் பாதுகாப்பில் தமிழக காவல்துறை அலட்சியமாக செயல்படுவதாக அக்கட்சியின்...

'கூட்டமே இல்லாத ஸ்டாலினின் ரோடு ஷோவுக்கு 2000 போலீஸ் பாதுகாப்பா?' – கொந்தளிக்கும் ஆதவ்!

தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு தமிழக காவல்துறை முறையான பாதுகாப்பு வழங்கவில்லை...