19
March, 2026

A News 365Times Venture

19
Thursday
March, 2026

A News 365Times Venture

”விஜய்யிடம் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை!” – நயினார் நாகேந்திரன்

Date:

தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. தொகுதிப் பங்கீடு குறித்த முடிவுகள் கிட்டத்தட்ட இறுதி நிலையை எட்டியுள்ளன. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும். மாநிலத் தலைவர் என்ற முறையிலும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர் என்ற முறையிலும் நான் இதுவரை நடிகர் விஜய்யிடமோ அல்லது அவரது தரப்பினரிடமோ எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

நயினார் நாகேந்திரன்

யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. அப்படியிருக்கையில் இத்தகைய செய்திகள் எங்கிருந்து வருகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு தவறான தகவல்.  அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியவை சுதந்திரமான அமைப்புகள். தவறு செய்தவர்கள் மீது மட்டுமே அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். இதற்கும் பா.ஜ.கவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பல அமைச்சர்கள் மீது 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்பே வழக்குகள் உள்ளன.

எனவே இதனைத் தேர்தல் நடவடிக்கையாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. பா.ஜ.க எந்த ஒரு சாதியையோ அல்லது மதத்தையோ சார்ந்த கட்சி கிடையாது. நாங்கள் அனைத்து மதத்தினரையும் சமமாகவே நடத்துகிறோம். இஸ்லாமியர்களின் நோன்புத் திறப்பு நிகழ்வுகளில்கூட நான் கலந்துகொள்கிறேன்.

நயினார் நாகேந்திரன்

உண்மையில் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராகப் பேசுவது தி.மு.க.,தான். இந்து மதப் பண்டிகைகளுக்கு அவர்கள் வாழ்த்துச் சொல்வதில்லை, ஆனால், மற்ற பண்டிகைகளுக்குச் சொல்கிறார்கள். தேர்தல் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிக விரைவில் வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை குறித்த அறிவிப்புகள் வெளியாகும்” என்றார்.  

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`வெய்ட்டா கவனிக்கணும்' – அள்ளி இறைக்கத் திட்டமிடும் அதிமுக? – அதிரும் ஆற்காடு தொகுதி!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், மொத்தம் 4 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இதில், மாவட்டத்...

தேமுதிக-வுக்கு எவ்வளவு ஓட்டு? விஜய்யின் தாக்கம் என்ன? – நேர்காணலில் ஸ்டாலின் கேட்ட முக்கிய கேள்வி!

சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர்...

'ரூ1.25 லட்சத்துக்கு குடும்பத்துக்கே விருப்ப மனு வாங்குனேன்!' – அறிவாலயத்தை வியக்க வைத்த உடன்பிறப்பு

அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணலை பரபரப்பாக நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. இன்று நடந்த...

தேனி: திமுக-வில் பன்னீர்; களத்தில் டிடிவி மனைவி? இழந்த செல்வாக்கை மீட்குமா அதிமுக? | முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள்...