13
March, 2026

A News 365Times Venture

13
Friday
March, 2026

A News 365Times Venture

வழக்கு போட்ட 13 மாணவர்கள்; 'நீட் தேர்வு முடிவுகள் வெளியிடக் கூடாது' – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு

Date:

நீட் தேர்வின் முடிவுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய பிரதேசத்தில் மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கால் நீட் தேர்வின் முடிவுகள் வெளியிடக்கூடாது என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

முன்னதாக கடந்த 4-ம் தேதி, சென்னை ஆவடி மையத்தில் 464 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில், அன்று பெய்த கனமழையால் மதியம் 3 மணியில் இருந்து மாலை 4.15 மணி வரை அந்த மையத்தில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம்

இதனைத் தொடர்ந்து, அந்தத் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்கள் ‘நீட் மறு தேர்வு’ நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஏ.ஆர்.எல் சுந்தரேசன், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கவும், மாணவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதற்கும் கால அவகாசம் வேண்டும் என்று வாதாடினார்.

இதையடுத்து, ‘அதுவரை நீட் தேர்வின் முடிவுகளை வெளியிடக் கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஆதவ் டேபிள் ஃபேன்; ஆனந்த் எலெக்ட்ரிக் குக்கர்! – போட்டி போட்டு பரிசுப் பொருட்களை இறக்கும் தவெக-வினர்

தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் உறுதி செய்திருக்கும் நிலையில், சென்னைக்குள்...

'கூட்டணிக்கு போகலாமா?'- அவசர மா.செக்கள் மீட்டிங்கில் ஆனந்த் கேட்ட கேள்வி; ட்விஸ்ட் கொடுக்கும் விஜய்?

தவெக சார்பில் திடீரென அவசர அவசரமாக கூட்டப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்...

ஈரான் தாக்குகிறதுதான்; ஆனாலும், மோதாமல் 'சைலன்ட்டாக' இருக்கும் வளைகுடா நாடுகள் – என்ன காரணம்?

ஈரான் மீது போர் தொடுத்தது என்னவோ அமெரிக்காவும், இஸ்ரேலும் தான். ஆனால்,...

ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து மும்பை வந்தடைந்த கச்சா எண்ணெய் கப்பல் – கைகொடுத்த `Dark Mode' டெக்னிக்!

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக ஹார்முஸ் ஜலசந்தியில் பல பில்லியன் பேரல்கள் கச்சா...