14
March, 2026

A News 365Times Venture

14
Saturday
March, 2026

A News 365Times Venture

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: தமிழ்நாடு உணவகங்கள், டீக்கடைகளுக்கு 1 மின்சார யூனிட்டிற்கு ரூ.2 சலுகை

Date:

இந்தியா முழுவதுமே கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இருந்து வருகிறது.

இதனால், வணிக சிலிண்டர்கள் விநியோகத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, டீக்கடைகள், உணவகங்கள் மின்சார அடுப்பிற்கு மெல்ல மெல்ல மாறி உள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் கேஸ் சிலிண்டர் பிரச்னையை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 10 நாள்களுக்கு தமிழ்நாட்டில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விறகு அடுப்பு

மேலும், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியுள்ளதாவது, “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் மின்சார கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை வழங்கப்பட உள்ளது.

வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் தட்டுப்பாடு நீங்கும் வரை மின்சார பயன்பாட்டிற்கான இந்தச் சலுகை தொடரும்.

டீக்கடைகள், வீட்டில் உணவு தயாரித்து விற்பவர்களுக்கும் இது பொருந்தும்.

இந்தச் சூழலில் விறகு எரிப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னனுமதி தேவையில்லை” என்று கூறியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“உளவுத் துறையைக் கையாளப் போகும் முதல் பெண் டி.ஜி.பி”- அதிரடி மாற்றங்களைக் கையில் எடுத்த அரசு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடந்துவந்த குற்றசெயல்களும், அதை தொடர்ந்து...

"தேர்தலில் போட்டியிடும்படி மோடியின் பிரதிநிதி என்னை சந்தித்தார்" – எம்.பி ஆக ஆசைப்படும் ஐ.எம்.விஜயன்

கேரளாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவைச் சேர்ந்த இந்தியக்...

“கூட்டணிக்காக நாங்கள் யாரையும் எதிர்பார்த்து இல்லை" – அண்ணாமலை அதிரடி

கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்...

திருச்சி: "திமுக-விற்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம்!" – பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருச்சியில்...