12
February, 2026

A News 365Times Venture

12
Thursday
February, 2026

A News 365Times Venture

’முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்கள்போல முரட்டு அடிமை பழனிசாமி’ – உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

Date:

விருதுநகரில் திமுகவின் இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இதில் முதலமைச்சர் மு,க.ஸ்டாலின், துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, தென் மண்டல அமைச்சர்கள் மற்றும் எம் எல் ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ ஆங்கிலேயே ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய மருது சகோதரர்களை தந்த மண் விருதுநகர். ஒரு கட்சியின் கிளை அமைப்பில் 50 லட்சம் உறுப்பினர்கள், 5 லட்சம் நிர்வாகிகள் கொண்ட இயக்கம் திமுக தான்.

பூத் அமைப்பு வரை பலம் கொண்டது இளைஞரணி. எந்த அமைப்பு பலமும், கொள்கையும், லட்சியமும் இல்லாமல் வெற்றுக் கூச்சல் போடும் கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அந்த கூட்டத்தால் யாருக்கும் பயனில்லை. அவர்களுக்கும் அவர்கள் பயனில்லை.

தேர்தல் வர உள்ளதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருகிறார்.  இனி திருக்குறளும் கூறுவார். தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, டபுள் என்ஜின் ஆட்சி அமைய வேண்டும் என்றார். ஏற்கனவே திராவிட மாடல் என்கிற சிங்கிள் என்ஜின் மூலம் தமிழ்நாடு 11.19% என்கிற இரட்டை இலக்கு வளர்ச்சியை அடைந்துவிட்டது. தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியில் பாதியை கூட டபுள் என்ஜின் ஆட்சி உள்ள மாநிலங்கள் தொடவில்லை.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். முரட்டு அடிமை தெரியுமா? எடப்பாடி பழனிசாமிதான் இந்தியாவிலேயே மிகப் பெரிய முரட்டு அடிமை. பாஜகவின் கிளையாக அதிமுக இருந்தது. தற்போது பாஜகவின் இலையாக மாறிவிட்டது.

திருவிழாவிற்கு எப்படி கடைகள் விரிபார்களோ அதே போல தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க போவதால் சிலர் கடைகளை விரித்திருக்கிறார்கள். திருவிழா கூட்டத்தில் பிள்ளை பிடிக்கிற கோஷ்டி, பிக் பாக்கெட் அடிக்கிற கோஷ்டியும் உள்ளே வருவார்கள். மிட்டாய் வாங்கி தருகிறேன், ஐஸ்கிரீம் வாங்கி தருகிறேன், சாக்லேட் வாங்கி தருகிறேன் என  குழந்தைகளை கடத்த பார்ப்பார்கள். இப்போது அதே மாதிரி ஆரம்பித்திருக்கிறார்கள்.

இ.டி கேஸில் இருந்து நான் காப்பாற்றுகிறேன்,  ஊழல் வழக்குகளில் இருந்து காப்பாற்றுவதாக வாக்குறுதிகளை கொடுத்து தமிழகத்தில் அடிமைகளை சிலர் சேர்த்து இருக்கிறார்கள்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

திருவிழாவுக்காக போட்ட கடைகள் எல்லாம் திருவிழா முடிந்தவுடன் எப்படி காணாமல் போகுமோ, அதேபோல் இந்த தேர்தல் முடிந்ததும் அந்த கடைகள் அனைத்தும் காணாமல் போகும். ஆனால் திமுக தான் மக்களோடு, மக்களாக நிற்கும்.

மக்களை கண்டாலே சிலர் ஓடுகிறார்கள், தூக்கத்தில் வந்து என்னென்னமோ உளறுகிறார்கள். உதயசூரியன் சின்னம் என்பது சுவற்றில் எழுதியது அல்ல, உயிர் போனாலும் உதயசூரியன் சின்னம் போகாது.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறிக்க வேண்டும்!' – நிஷிகாந்த் துபே தீர்மானம் தாக்கல்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துவதாகக் குற்றம்சாட்டி,...

நாளை நடக்கவிருந்த செவிலியர் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ரத்தா? – கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

கோவிட் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு சென்னையில் நாளை பணி...

வடகொரியா: அதிகாரத்தின் அடுத்த வாரிசு; தலைமைப் பொறுப்புக்கு மகளை முன்னிறுத்தும் கிம் ஜாங் உன்!

வடகொரியாவின் உச்சபட்ச அதிகார மையமாகத் திகழும் கிம் ஜாங் உன், கடந்த...

'காங்கிரஸின் தவறு தான் அது'; சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர் – 2006 தேர்தலில் நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள்...