12
February, 2026

A News 365Times Venture

12
Thursday
February, 2026

A News 365Times Venture

பொதுத்துறை நிறுவனங்களால் அதிக நஷ்டமடைவதில் தமிழகம் 3-ஆம் இடம்; நிதிக்குழு சொல்லும் காரணம் என்ன?

Date:

இந்தியாவிலேயே பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் அதிக நஷ்டத்தைச் சந்திக்கும் மூன்றாவது மாநிலம் ‘தமிழ்நாடு’ – இப்படி 2022-23 நிதியாண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது 16-வது நிதிக்குழு.

முதல் இரண்டு மாநிலங்கள் என்ன?

16-வது நிதிக்குழு அறிக்கையின் தொகுதி 1-ன் படி, 2022-23 நிதியாண்டில்…

உத்தரப்பிரதேசம் ரூ.32,430 கோடி நஷ்டத்தையும்,

ராஜஸ்தான் ரூ.18,814 கோடி நஷ்டத்தையும்,

தமிழ்நாடு ரூ. 16,048 கோடி நஷ்டத்தையும் சந்தித்துள்ளன.

இந்த மூன்று மாநிலங்களும் வடகிழக்கு மற்றும் மலைப்பாங்கான பகுதி அல்லாத மாநிலங்களில் (Non- NEH States) சேர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

TANGEDCO

ஏன் இந்த நஷ்டம்?

பிற Non- NEH மாநிலங்களைப் போலவே, இந்த மாநிலங்களுக்கும் நஷ்டம் ஏற்படுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது ‘மின்சாரத் துறை’.

2022-23 நிதியாண்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் (TANGEDCO) ரூ.9,192 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

ஆனால், அதன் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், TANGEDCO-வின் கீழ் இயங்கும், தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் லிமிடெட் (TNPDCL) 2024-25 நிதியாண்டில் ரூ.2,073 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"எப்ஸ்டீனை சந்தித்து இருக்கிறேன் தான்; ஆனால், 'இதற்கு'!" – ராகுல் காந்திக்கு ஹர்தீப் பூரி பதில்!

உலகம் முழுவதும் பரபரப்பைக் கிளப்பி வரும் எப்ஸ்டீன் ஃபைலுக்கு இந்தியாவும் விதிவிலக்கு...

தவெக: சேலம் விஜய் சந்திப்பு; 51 நிபந்தனைகள்; 5,000 பேருக்கு அனுமதி; செங்கோட்டையன் சொல்வது என்ன?

சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்திற்குக் கடந்த டிசம்பர் மாதம்...

கேரளா: "சட்டசபைத் தேர்தலில் 21 பாஜக MLA-க்கள் வெற்றிபெற வேண்டும்" – மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆசை

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் அதே காலகட்டத்தில் கேரளாவிலும் சட்டசபைத் தேர்தல்...