21
March, 2026

A News 365Times Venture

21
Saturday
March, 2026

A News 365Times Venture

'புகார் மட்டும் சொல்கிறார்கள்; ஆனால், உதவவில்லை; கோழைகள்" – NATO-வை சாடும் ட்ரம்ப்

Date:

ஈரான் போர் தொடங்கி இன்றோடு நான்காவது வாரம் தொடங்குகிறது.

ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் என எந்த நாடும் போர் நிறுத்தத்திற்குத் தயாராக இல்லை.

போர் நிறுத்தம் வேண்டாம்

‘விரைவில் போர் முடிவுக்கு வரும்’ என்று நேற்று முன்தினம் (மார்ச் 19), அமெரிக்கா சொன்னதில், உலகம் கொஞ்சம் ஆசுவாசமாகியது.

ஈரான் போர்

ஆனால், அதற்கும் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘எனக்கு போர் நிறுத்தம் வேண்டாம். எதிரியை நாம் அடியோடு அழிக்கும் போது, போர் நிறுத்தம் செய்யமாட்டோம் என்று உங்களுக்கு தெரியும் தானே’ என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

அமெரிக்காவிற்கு ஈரான் போரில் உள்ள மிகப்பெரிய பிரச்னையே ‘ஹார்முஸ் ஜலசந்தி மூடலே’. இதை சரிசெய்ய தங்களது போர்க்கப்பலை அனுப்ப சொல்லி சீனா, ஜப்பான், நேட்டோ நாடுகளிடம் ட்ரம்ப் கேட்டார்.

சிலர் மறுத்துவிட்டனர்… சிலர் வாயைக் கூட திறக்கவில்லை.

நேட்டோ நாடுகள் – ‘கோழைகளே’

இதை தற்போது கடுமையாக சாடியுள்ளார் ட்ரம்ப்.

“அமெரிக்கா இல்லையென்றால், NATO வெறும் காகிதப் புலிதான். அணு ஆயுதம் கொண்ட ஈரானுடன் சண்டையிட நேட்டோ நாடுகள் வரவில்லை.

இந்த நாடுகளுக்குக் குறைந்த ஆபத்தோடு ராணுவ ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறோம். ஈரான் உடனான போரில் உதவாத அவர்கள், எண்ணெய் விலை உயர்வை பற்றிப் புகார் கூறுகிறார்கள்.

ஆனால் அதற்கு காரணமான ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க உதவ மறுக்கிறார்கள். கோழைகள்… உங்களை மறக்கமாட்டோம்” என்று தனது ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"அவர் இங்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து உடனே வந்தேன்" – சிபிஎம் அலுவலகத்தில் வைகோ; பின்னணி என்ன?

திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுப்பறி நீடித்து...

”கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி” – ஓ.பன்னீர்செல்வம் தாக்கு

விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூரில் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் சாத்தூர்...

"விசிக தோற்றதற்கு திமுக சொன்ன காரணம்; வேட்பாளர்களைத் தேர்வு செய்ய சுதந்திரம் வேண்டும்" – திருமா

திமுக கூட்டணி 'வலிமை'யான கூட்டணி என்று சொல்லிக்கொண்டாலும், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...