22
February, 2026

A News 365Times Venture

22
Sunday
February, 2026

A News 365Times Venture

பிப். 24 முதல் உலக நாடுகளுக்கு புது வரி அமல்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ட்ரம்பின் புது ரூட்!

Date:

‘அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்போ, தீர்ப்பில்லையோ… வரி ரத்தோ, வரி ரத்து இல்லையோ… நான் வரி போட்டே தீருவேன்’ என்றுதான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருக்கிறார்‌ போலும்.

கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20), ‘அதிபர் அதிகாரத்தை மீறி சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)-ன் கீழ், உலக நாடுகளின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது’ என்று ட்ரம்பிற்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது அமெரிக்க உச்ச நீதிமன்றம்.

இதனால், கடந்த ஆகஸ்ட் மாதம், IEEPA-ன் கீழ், உலக நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவித்த வரிகள் ரத்து செய்யப்படுகின்றன.

ட்ரம்ப் – பரஸ்பர வரி

ஆனால், எப்படியாவது வரி போட்டே ஆக வேண்டும் என்று ட்ரம்ப் உறுதியாகி இருக்கிறார்.

இதற்காக, தற்போது புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளார் ட்ரம்ப்.

அமெரிக்க சாசனத்தின் படி, வரிச் சட்டம் 1974-ன் கீழ் பிரிவு 122 தான் அது.

வர்த்தக பற்றாக்குறை எழும்போது, இந்தச் சட்டத்தின் கீழ், 15 சதவிகிதம் வரை வரி விதிக்க முடியும்.

தீர்ப்பு வந்த அன்று, வெள்ளிக்கிழமை இந்தச் சட்டத்தின் கீழ், உலக நாடுகளின் மீது 10 சதவிகித வரியை விதித்திருந்தார்‌‌ ட்ரம்ப்.

நேற்று, அதை 15 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறார்.

இந்த வரி விதிப்பு வரும் 24-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மேலே சொன்ன சட்டத்தின் கீழ், 150 நாள்கள் மட்டுமே வரி விதிக்க முடியும்.

அதற்குள் ட்ரம்ப் அரசாங்கம் வலுவாகவும், சட்டத்திற்கு உட்பட்டும் வரி விதிப்பைக் கொண்டு வரும்.

அது எப்படி இருக்கப் போகிறதோ?

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related