26
March, 2026

A News 365Times Venture

26
Thursday
March, 2026

A News 365Times Venture

பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்ட ஊட்டி; தலைமைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய அ.தி.மு.க நிர்வாகிகள்!

Date:

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல்களை அரசியல் இயக்கங்கள் வெளியிட்டு வருகின்றன. அ.தி.மு.க தரப்பில் களமிறங்கும் முக்கிய நிர்வாகிகளின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ளார்.

Ooty

அதேவேளை, கூட்டணி கட்சிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி ( உதகமண்டலம்) தொகுதியை கூட்டணி கட்சியான பா.ஜ.க – விற்கு ஒதுக்கீடு செய்திருக்கிறது அ.தி.மு.க தலைமை.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஊட்டி தொகுதியை பா.ஜ.க கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவியது. இந்த தேர்தலில் ஊட்டி தொகுதியை பா.ஜ.க – விற்கு ஒதுக்கீடு செய்யக்கூடாது என அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வந்துள்ளனர்.

ஊட்டி
ஊட்டி

ஆனால், ஊட்டி தொகுதியை பா.ஜ.க -வுக்கு ஒதுக்கீடு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது அ.தி.மு.க தலைமை. இதனை சற்றும் எதிர்பாராத அக்கட்சியின் நிர்வாகிகள், ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் நேற்று மாலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க அதிருப்தி நிர்வாகிகள், ” ஊட்டி தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் தான் என நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் அதீத நம்பிக்கையுடன் களத்தில் இறங்கி வேலை செய்து வந்தார்.

அதிருப்தி நிர்வாகிகள்

சமவெளி பகுதியில் பா.ஜ.க – விற்கான தொகுதிகளை ஒதுக்க இருப்பதாக தலைமை கூறியிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இப்படி செய்திருக்கிறார்கள். இந்த முடிவை தலைமை நிச்சயம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோம்” என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"ஜெயலலிதாவின் ஆன்மாவையே சாகடிக்கும் வேலை" – எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமைச்சர் சிவசங்கர்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசியல் களம் தீயாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளின்...

ஸ்டாலின் Vs விஜய்… பெண்கள் வாக்குகளை வளைப்பதில் தீவிரம் | ‘வாவ்’ வியூகம் 10

பெண்கள் வாக்குகளை வளைப்பதில் தீவிரம்‘வாவ்’ வியூகம் 10வாக்காளர்கள் எதிர்பார்த்த ஜனநாயகத் திருவிழா...

அமைச்சர் சக்கரபாணியின் அண்டர் கிரவுண்ட் டீலிங்; தொகுதியை மேற்கு மாவட்டங்களுடன் இணைக்கு மெகா பிளான்!

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருப்பவர்...

“இந்த நட்பு நாடுகள் மட்டும் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கலாம்" – ஈரான் பட்டியலில் இந்தியா?

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கூட்டாகப் போர் தொடங்கி 25 நாள்களுக்கும்...