18
April, 2025

A News 365Times Venture

18
Friday
April, 2025

A News 365Times Venture

பாஜக கூட்டணி: "விழி பிதுங்கிப் பதறும் திமுக; ஆனந்தத்தில் அதிமுக" – ராஜேந்திர பாலாஜி குதுகல பேச்சு

Date:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராஜதந்திரத்தோடு அற்புதமான கூட்டணியை அமைத்துள்ளார்.

ராஜேந்திரபாலாஜி

எடப்பாடியார் என்ன செய்வார், என்ன செய்துவிட முடியும், என்ன செய்யப் போகிறார் என்று பொதுமக்களும், செய்தி சேனல்களும் எதிர்பார்த்த இந்த நேரத்தில் அற்புதமான கூட்டணியை அமைத்துள்ளார்.

இதன்மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரமுடியும். அ.தி.மு.க ஆட்சிய மலரச் செய்ய முடியும் என எடப்பாடி பழனிசாமி காட்டியுள்ளார்.

பங்குனி உத்திரத்தன்று எடுக்கின்ற முடிவுகள் வெற்றிபெறும் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தின் அடிப்படையில் வெற்றி நம் கண் முன்னே தெரிகிறது.

பேச்சு

2026 மே மாதம் சட்டமன்ற கதாநாயகனாக முதல்வராக எடப்பாடி பழனிசாமி செல்ல இருக்கிறார். 2026-ல் வெற்றி பெற்று ஜெயின்ட்ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்குச் சிறப்புரை ஆற்றுவார்.

இந்த காட்சிகள் எல்லாம் எங்கள் கண்முன்னே வந்து செல்கின்றன. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைக்கப்பட்டுள்ள கூட்டணியைப் பார்த்து விழி பிதுங்கிப் பதறிப்போய் இருக்கிறது தி.மு.க. கூட்டம். அ.தி.மு.க. கூட்டம் ஆனந்தத்தில் மிதக்கிறது” எனப் பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`Wifi முதல் மின்சார உற்பத்திவரை' – இந்தியாவின் முதல்`Smart Village' இப்போது எப்படி இருக்கிறது?

``காலேஜ் படிச்சிட்டு இருக்குற இவன் எதுக்கு பஞ்சாயத்து தலைவர போய் பாக்குறான்......

`நிதி நிறுத்தம்' ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு உடன்பட மறுக்கும் ஹார்வார்டு பல்கலைக்கழகம்!

'தனக்கு எதிராக யாரும் பேசக்கூடாது' என்பது தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின்...

“விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம்'' – இந்திய முஸ்லிம் ஜமாத் அறிவிப்பு; காரணம் என்ன?

தவெக தலைவர் விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம் என்றும், விஜயிடம்...

“சீனா உடன் ஒப்பந்தம்; பேச்சுவார்த்தைக்கு தயார்'' – இறங்கி வந்த ட்ரம்ப்.. கண்டிஷன் போட்ட சீனா

அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நடக்கும் வரி பிரச்னை உலகறிந்தது.'பேச்சுவார்த்தைக்கு தயார்' என்ற...