12
February, 2026

A News 365Times Venture

12
Thursday
February, 2026

A News 365Times Venture

பழனி முருகன் கோயிலில் ஒலித்த 'உங்க விஜய்' பாடல்; இளைஞர் அட்ராசிட்டி – போலீஸில் புகார்!

Date:

பழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் முருகன் கோயிலுக்கு எளிதாகச் செல்வதற்கு யானை பாதையைத்தான் பயன்படுத்துவார்கள். இதனால் யானை பாதையில் கூட்டம் அதிகளவில் இருக்கும். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்துவதற்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் யானை பாதையில் குறிப்பிட்ட தூரத்திற்கு இடையிடையில் ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

தைப்பூசம் முடிந்து இரண்டு நாள்கள் கழித்து முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து வந்த இளைஞர் ஒருவர், யானை பாதையில் வைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கியுடன் தன்னுடைய மொபைல் போனை இணைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் ‘உங்க விஜய்… உங்க விஜய்… உயிரென வரவா’ என்ற பாடலை ஒளிப்பரப்பியுள்ளார். இதை பார்த்த பக்தர் ஒருவர், வீடியோ எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இது குறித்து பழனி முருகன் கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, “இது கடந்த வாரத்தில் நடைபெற்றிருக்கிறது. பக்தர்களை ஒழுங்குபடுத்துவதற்காக யானை பாதையில் தனித் தனியாக ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதனால் அந்த இளைஞர் ஒலிப்பரப்பிய பாடல் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே கேட்டிருக்கும். மேலும் இது குறித்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறோம். தற்போது அந்த பாதையில் இருந்த ஒலிப்பெருக்கிகள் அகற்றப்பட்டு விட்டன” என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சேலம்: `10 வருஷமாகியும் குழந்தைக்கு பிறப்பு சான்று கிடைக்கல'- அலட்சிய அதிகாரிகள்; அல்லாடும் பெற்றோர்

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், தாத்தியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் -...

புதுச்சேரி: மாநில அந்தஸ்து தரவில்லை என்றால் தேர்தல் கிடையாது! – பேரவையில் நடந்த பரபரப்பு வாதம்

``போலி மருந்தால் இறந்தவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் வேண்டும்...”புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வரும்...

`டெல்லி ஆட்சியாக இருந்தால் இருந்துட்டுப் போகட்டுமே' – சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தும்...