9
June, 2026

A News 365Times Venture

9
Tuesday
June, 2026

A News 365Times Venture

நெல்லை: 'விஜய் படத்தின் கீழ் அமர மாட்டேன்!' – இருக்கையை இடமாற்றிய மேயர்

Date:

அரசு அலுவலகங்களில் தமிழக முதலமைச்சர் புகைப்படம் வைக்க வேண்டும் என்ற் அரசாணை உள்ளது. ஆனாலும், திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பு வகிக்கும் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் அறைகளில் முதலமைச்சர் படம் வைப்பதில் இன்னும் பிரச்சனை நீடிக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதும், அவரது புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் வைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. அதற்கான பிரத்யேக படமும் வெளியானது. ஆனால், நெல்லை மாநகராட்சியில் மேயர், துணை மேயர் ஆகியோர் தி.மு.க-வைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்களின் அறைகளில் முதல்வர் விஜய் படம் வைக்கப்படவில்லை.

இதையடுத்து, நெல்லை மாநகராட்சி அலுவலகத்தின் முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தினர் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மேயர் அறை

நெல்லை மாநகராட்சியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அறைகளில் முதல்வர் படத்தை வைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணாவிடம் மனு அளித்தனர். த.வெக-வினரின் பல கட்ட போராட்டத்தை தொடர்ந்து, மேயர், துணை மேயர் அறைகள் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் படம் வைக்கப்பட்டது.

அதுவும், முன்னாள் முதல்வர்களான மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் படங்களுக்கு நடுவே முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் மாட்டப்பட்டது. மாநகராட்சி ஆணையாளரின் இந்த நடவடிக்கையால் திமுகவைச் சேர்ந்த மேயர் ராமகிருஷ்ணன் அதிருப்தி அடைந்தார்.

பெயர் ராமகிருஷ்ணன் இருக்கைக்கு மேலாக, அதாவது அவரது தலைக்கு மேல் முதலமைச்சர் விஜய் புகைப்படம் இருந்தது. வழக்கமாக மேயர் ராமகிருஷ்ணன் அந்த இடத்தில் அமர்ந்து தான் அலுவலகப் பணிகளை கவனிப்பார். ஆனால் விஜய் புகைப்படத்தின் கீழ் அமர்ந்து பணியாற்ற விரும்பாத மேயர் வழக்கமாக அமரும் இருக்கையில் அமரவில்லை.

அந்த இடத்தையும் இருக்கையையும் அலுவல் பணிகளுக்குப் பயன்படுத்தாமல், அதே அறையில் வேறு ஒரு இடத்தில் போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்து அலுவல் பணிகளைக் கவனித்து வருகிறார். 

நெல்லை மேயர் அறை
நெல்லை மேயர் அறை

மேயர் ராமகிருஷ்ணனின் செயல் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேயரின் செயலுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் வெளியாகி வருகின்றன. மேயரின் செயலைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் ராகுல் காந்தி ரத்ததானக் கழகத்தின் நிறுவனருமான வழக்கறிஞர் பிரம்மா கூறுகையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மேயர், அரசியலமைப்பு சட்டப்படி பதவியேற்றுள்ள தற்போதைய முதலமைச்சரை அங்கீகரித்து செயல்படுவதே மரபு.

தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகளை நிர்வாகத்தில் காட்டுவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது. உண்மையிலேயே கொள்கைப்பிடிப்பும் கட்சிப்பற்றும் இருந்தால், மேயர் ராமகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போகட்டும்” எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பு வகிக்கும் பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட இடங்களில் முதலமைச்சர் விஜய் படத்தை வைப்பது தொடர்பாக இப்போதுவரை பிரச்சனை நீடித்து வருகிறது. அதனால் இந்த விவகாரத்தில் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.வெ.க-வினர் தெரிவிக்கின்றனர்.

பிரம்மா

அரசியலமைப்புச் சட்டத்தையும் பதவியேற்றபோது விருப்பு வெறுப்பற்று செயல்படுவதாகக் கூறிய உறுதிமொழியையும் மீறும் மக்கள் பிரதிநிதிகளை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றும் த.வெ.க-வினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், இந்த் விவகாரம் குதித்து நெல்லை மேயர் ராமகிருஷ்ணனிடம் கேட்டதற்கு, ” அரசியல் ஆதாயத்திற்காக ஒரு சிலர் இது போன்ற பிரச்சனைகளை கிளப்பி வருகிறார்கள். முதலமைச்சரின் படத்தை வைக்க வேண்டும் என்று த.வெ.க-வினர் கோரிக்கை வைத்ததும் மாநகராட்சியில் அவரது படத்தை வைத்து விட்டோம்.

இப்போது அதை எனது அறையில் மையப்பகுதியில் வைத்திருக்கிறார்கள் அங்கு அமர பிடிக்காமல் சற்று தள்ளி அமர்ந்திருக்கிறேன், அவ்வளவுதான்” என்று முடித்துக் கொண்டார்.

“பல்வேறு மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில், இருக்கை விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது” என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அனல் பறந்த ஆலோசனைக் கூட்டம்: காங்கிரஸை வறுத்தெடுத்த மாநிலக் கட்சிகள்; 'அன்போடு' ராகுல் காந்தி பதில்!

டெல்லியில் ஜூன் 8 (நேற்று) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில்,...

DAC: OMR-ல் சாட்டிலைட் அலுவலகம் தொடக்கம்! சென்னையின் முதல் English-Themed வசிப்பிட திட்டம் அறிமுகம்

சென்னையின் மிகவேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மற்றும் IT தளமான பழைய...

கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தான்; ஆனால், `அமைச்சர்' பதவிகளில் ஏகப்பட்ட பிரச்னை!

சில மாதங்களாக, கர்நாடகா முதலமைச்சர் பதவிக்கு குழப்பம் நீடித்து வந்தது. அது...

'அது நான் இல்லை, போதைப்பொருள் கடத்தலுக்கும், எனக்கும்.!'- லீமா ரோஸ் சகோதரர் ஜான் பிரிட்டோ

போதைப் பொருள் கடத்தலுக்கும், எனக்கும் தொடர்பில்லை என அதிமுக எம்எல்ஏ...