திமுக தங்களுக்கு கொடுத்த எண்ணிக்கை, சின்னம் தொடர்பாக தங்களுக்கு வருத்தம் உள்ளதாக மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தெரிவித்திருக்கிறார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28, தேமுதிக 10, விசிக 8, கம்யூனிஸ்ட்கள் தலா 5, கொமதேக, மதிமுக 4, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக-வுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 175 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதில் எஸ்டிபிஐ உட்பட சில சிறிய கட்சிகள் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் தலா ஒரு தொகுதியில் களமிறக்கப்பட உள்ளன.
அதேபோல மதிமுக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளில் 3 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடுகிறது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மதிமுக-வுக்கான தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பின் மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது அவர், “எங்களுடைய தரத்திற்கு தகுந்த மாதிரி எண்ணிக்கை கொடுக்கவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு இருக்கிறது. சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகிறோம். இதுதான் எங்கள் நிலைமை. நான்கு தொகுதிகளிலும் எங்கள் சின்னத்தில் போட்டியிட முடியவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.




